புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தமிழை விட தெலுங்கில் ஹிட் அடித்த இளையராஜா பாடல்.. என்ன படம் தெரியுமா?

Ilaiyaraja – தெலுங்கில் வம்சி இயக்கத்தில், ராகவா, நிஷாந்தி, கிருஷ்ண பகவான், நரசிம்மராவ் உள்ளிட்டோர் நடிப்பில் 1987 ல் வெளியான படம் வம்சி. ஹரி அனுமோலுவ் ஒளிப்பதிவு செய்தார். இளையாராஜா இசையமைத்திருந்தார்.

இப்படம் மூலம் தான் ராகவா சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தின் கதை, ஒரு பணக்கார திமிர்பிடித்த மாணவன் மகரிஷி ( ராகவா ), புரபர்சர்களை கிண்டல் அடிப்பது, மாணவர்களை அடிப்பது என அட்டூழியம் செய்து வருகிறான் கல்லூரியில். சுசித்ராவை சந்திக்கும் பொது அவர் தன்னை மாற்றிக் கொள்கிறான்.

இப்படி அவர் மீது காதலில் விழுந்த நிலையில் சுசித்ராவின் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைகளை பயமுறித்து ராகவ திருப்பி அனுப்புகிறார். மகரிஷை பழிவாங்க அங்குள்ள தன் நண்பனான திலக் என்ற போலீஸை அவள் திருமணம் செய்கிறார். இதை நிறுத்த முயன்று மகிரிஷி சிறையில் அடைப்படுகிறான்.

சுசித்ரா – திலக் இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை பிறக்கிறது. அதை பறித்துக் கொண்டு மகிரிஷி ஓடும்போது, போலீஸ் துரத்துகிறது. அவர் கீழே விழும்போது குழந்தையைக் காப்பாற்றி உயிரிழக்கிறார் மகிரிஷி. இறுதியில் சுசித்ராவின் பாசத்தைப் பெறுவதாக படம் முடிகிறது. இப்படம் கலவையன விமர்சனங்களைப் பெற்றது.

மகரிஷி படத்தில் இடம்பெற்ற மாட்டா ராணி மவுன மிடி பாடல்

இதில், இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற மாட்டா ராணி மவுன மிடி என்ற டூயட் பாடல் பிரபலம். எஸ்.பி.பி மற்றும் ஜானகி இருவரும் பாடியிருந்தனர். இப்பாடலின் மறு உருவாக்கம் தான் ராமராஜன், சேகா நடிப்பில் செண்பகமே என்ற பாடலாக உருவாக்கப்பட்டது.

அதேபாடலை எஸ்.பி.பி சோலோவாக பாடும் மஞ்சப் பொடி தேய்கையிலே என்று போட்டிருந்தார். தமிழை விட தெலுங்கில் இப்பால் சூப்பர் ஹிட்டாக அமைந்து குறிப்பிடத்தக்கது.

Trending News