புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இளையராஜாவின் கடைக்குட்டி மகனின் சொத்து மதிப்பு.. 16 வயதிலிருந்து சம்பாதித்து சேர்த்து வைத்த யுவன்

Yuvan Sankar Raja Property Value: இளசுகளின் சோகத்தை தீர்க்கும் விதமாகவும், தனிமையில் இருக்கும் போது கேட்கக்கூடிய இசையாகவும், காதல் தோல்வியால் பிரச்சினையில் இருக்கும் காதலர்களுக்கு இசையின் மூலம் புத்துணர்ச்சியை கொடுத்தவர்தான் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசைப் பயணத்தை கிட்டத்தட்ட 16 வயதிலேயே தொடங்கி இருக்கிறார்.

அப்படி இவர் முதன்முதலாக இசையமைப்பாளராக அரவிந்தன் படத்தின் மூலம் என்டரி கொடுத்தார். இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்களாக பயணித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்ன பட்ஜெட் படங்களுக்கும், முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு தான் இசையமைப்பேன் என்று இல்லாமல் கதை இவருக்கு பிடித்திருந்தால் அதற்கு ஏற்ற மாதிரி களமிறங்கி தூள் கிளப்பி விடுவார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அத்துடன் இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 12 படங்களில் இசையமைப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இப்படி பிசியாக இருக்கும் யுவனின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Also read: யுவன் பிஜிஎம்மில் முதல் 5 இடத்தைப் பிடித்த மூவிஸ்.. அஜித்துக்கு போட்டு மரண மாஸ் கிளப்பிய படம்

அந்த வகையில் 100 கோடிக்கும் மேல் இவருடைய சொத்து மதிப்பு இருக்கிறது. மேலும் ஒரு படத்தில் இவர் இசையமைக்கிறார் என்றால் குறைந்தது 5 கோடி முதல் 8 கோடி வரை சம்பளமாக வாங்குவார். அதிலும் தற்போது பெரிய கூட்டணியுடன் இணைந்து இருப்பதால் கோட் படத்திற்காக 10 கோடி சம்பளத்தை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார். அந்த வகையில் ஓய்.எஸ்.ஆர் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் பியார் பிரேமா காதல் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன் படத்தை தயாரித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே ஹிட் ஆனதால் இதன் மூலமும் இவருக்கு பல கோடி அளவில் லாபம் கிடைத்திருக்கிறது.

அத்துடன் ஆஸ்டன் மார்ட்டின், வேன் குவிஸ், மினி கூப்பர் S, பென்ஸ் GLE கிளாஸ் போன்ற ஏராளமான சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். மேலும் சென்னையில் சொந்தமாக 10 கோடி அளவில் கட்டப்பட்ட பங்களா ஒன்றும் இருக்கிறது. இதனை இன்னும் அதிகரிக்க தொடர்ந்து உத்வேகத்துடன் திறமையை பயன்படுத்தி சம்பாதித்து மேன்மேலும் சொத்துக்களை சேர்த்து வருகிறார்.

Also read: கிரிக்கெட் வீரரை தாஜா பண்ணும் வெங்கட் பிரபு! யுவன் மூலம் விட்ட தூது..

Trending News