புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நா போய்ட்டா , நடிகரை தவிர வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கோ! அஜித் தம்பி வெளியிட்ட உருக்கமான பதிவு

அண்மைக்காலமாக இறப்பு யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதை உணர்த்தும் வகையில் திரைப்பிரபலங்களின் மறைவு நம் அனைவரையும் கண்கலங்க வைத்து வருகிறது. அதிலும் முக்கியமாக சில திரைபிரபலங்கள் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரின் தம்பி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தை இயக்கியது மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சிறுத்தை சிவா. இவர் தொடர்ந்து பல படங்களை இயக்கி வெற்றிப்பெற்ற நிலையில், தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 வரலாற்று படத்தை மும்முரமாக பெரும் பொருட்செலவில் இயக்கி வருகிறார்.

Also Read: அட்லீயை வச்சு செய்த தயாரிப்பாளர்.. கைதட்டி சிரித்த சிறுத்தை சிவா

இதனிடையே இவரது தம்பியும், நடிகருமான பாலா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2014 ஆம் ஆண்டு, நடிகர் அஜித் நடிப்பில் ரிலீசான வீரம் படத்தை சிறுத்தை சிவா இயக்கிய நிலையில், இவரது தம்பி பாலா அந்த படத்தில் அஜித்துக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பின் சில படங்களில் நடித்து வந்த இவர், தற்போது கேரளாவில் உள்ள மருத்துவமனையில் நுரையீரல் மற்றும் இதயத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் ஏற்கனவே முதல் மனைவியான அம்ரிதா என்பவரை விவாகரத்து செய்த நிலையில், பாலாவின் நிலை அறிந்து முதல் மனைவியும், அவரது மகள் அவந்திகாவும் அவரை சந்திக்க மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் நடிகர் பாலா கடந்த 2021 ஆம் ஆண்டு மருத்துவரான எலிசபெத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அவரும் மருத்துவமனையில் பாலாவை பார்த்துக்கொண்டு வருகிறார்.

Also Read: மருத்துவமனையில் அஜித்தின் தம்பி.. சூர்யா 42 ஷூட்டிங்கை நிறுத்திய சிறுத்தை சிவா

இந்நிலையில் பாலாவுக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யும்படி மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்வதால் 50 சதவிகிதம் மட்டுமே குணமாவதற்கு வாய்ப்புள்ள நிலையில், ஒருவேளை பாலா அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரவில்லை என்றால் வாழ்க்கையில் தனியாக வாழாமல் தனது இரண்டாவது மனைவியை திருமணம் செய்து வாழ வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ஒரு நடிகரையோ அல்லது வேறு பணிகளை செய்பவரை திருமணம் செய்துக்கொள்ளாமல் மருத்துவரை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழுமாறு தனது உருக்கமான பதிவை தன் மனைவியிடம் கூறியுள்ளார். இவரது இந்த பதிவு பலரையும் கண்கலங்க வைத்துள்ள நிலையில், கூடிய விரைவில் இவர் குணமடைந்து வீடு திரும்ப பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Also Read: சூர்யாவின் 42 வது படத்தின் தலைப்பு.. வெற்றியை உறுதி செய்த சிறுத்தை சிவா

Trending News