வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அடுத்தவங்க வாழ்க்கையை பறிச்சி எனக்கு பழக்கம் இல்லை.. ராதிகாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த வருகிறது. இதில் தற்போது கோபியின் கல்யாணத்துக்கு சமைக்க வந்திருக்கும் பாக்யாவால் பயந்து நடுங்கி உள்ளார் ராதிகா. ஏனென்றால் பாக்யாவினால் இந்த கல்யாணம் நின்று விடுமோ என்ற எண்ணத்தில் ராதிகா உள்ளார்.

இந்நிலையில் கோபியின் தந்தை ராமமூர்த்தி இரவு தூங்க முடியாமல் தவித்து வருகிறார். விடிஞ்சா கல்யாணம், கோபி நம்ம மானத்தை கெடுத்துருவானோ என்ற எண்ணத்தில் தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த ஈஸ்வரி நம்மள மீறி கோபி கல்யாணம் பண்ணிக்க மாட்டான் என ஆறுதல் கூறுகிறார்.

Also Read : கதிர் போட்ட கணக்கு சரியா வந்துடுச்சு.. ஜெயிச்சுட்ட மாறா

இந்த நிலையில் காலை மணமக்களுக்கு காபி கொடுப்பதற்காக செல்வி செல்கிறார். அப்போது செல்வி கோபியிடம் பாக்யா பாவம் என கூற உன்ன தூது அனுப்பினாளா என கோபி கோவமாக பேசுகிறார். காலையில் ராதிகா மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டு வெளியே நிற்கிறார்.

அப்போது எதேர்ச்சியாக எல்லோருக்கும் காபி கொடுக்க பாக்யா வெளியே வருகிறார். அந்த சமயத்தில் ராதிகா பாக்யாவிடம் பல கேள்விகள் கேட்கிறார். நீங்க அப்பாவி, நல்லவங்கனு நினைச்சேன், ஆனா இப்பதான் தெரியுது நீங்க ரொம்ப புத்திசாலி. இந்த கல்யாணத்தை நிறுத்த தானே இங்க வந்து இருக்கீங்க.

Also Read : பொழச்சு போ.. மண்டபத்தில் கோபியின் ஆணவத்தை அடக்கிய மனைவி

நான் சந்தோஷமா இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா என்ற ராதிகா கேட்கிறார். உடனே பாக்யா அடுத்தவங்க வாழ்க்கையை பறிக்க, கெடுக்க எனக்கு தெரியாது. உங்களுக்கு இப்ப வேலை இல்ல, எனக்கு நிறைய வேலை இருக்குது என பாக்யா கூறுகிறார். இதைக் கேட்டு அப்படியே ராதிகா ஆடி போகிறார்.

மேலும் ரசிகர்கள் கோபி, ராதிகா திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஈஸ்வரி மற்றும் இனியா இருவரும் சேர்ந்து வந்த இந்த கல்யாணத்தை நிறுத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இவ்வாறு பல சுவாரசியமான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Also Read : களை கட்டும் பிக் பாஸ் சீசன் 6.. உறுதியான 6 போட்டியாளர்கள்

Trending News