செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

1987-ல் வரிசையாக தோல்வியை சந்தித்த கேப்டன்.. தோள் கொடுத்த தூக்கி விட்ட சூப்பர் ஸ்டார்

சினிமாவில் ஒரே சமயத்தில் தங்களது பயணத்தை துவங்கியவர்கள் விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த். முதலில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்து, அதன் பிறகு தான் அவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று பின் இப்போது வரை சூப்பர் ஸ்டார் ஆக உச்சத்தில் இருக்கிறார்.

அதேபோல் 1978ல் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய விஜயகாந்த் சுமார் 156 படங்களுக்கு மேல் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால் 1987-இல் வரிசையாக அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்து பெரிய அடி வாங்கினார். அதன் பின் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்ற கேப்டனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோள் கொடுத்து தூக்கி விட்ட சம்பவம் தற்போது ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்ட வைக்கிறது.

Also Read: 175 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள்.. கேப்டனின் அசத்தல் லிஸ்ட்

1987-களில் விஜயகாந்த் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தது. அப்போது ரஜினியின் படங்கள் எல்லாம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்கில் தாறுமாறாக ஓடி பட்டையை கிளப்பியது. இருப்பினும் விஜயகாந்தின் சறுக்கல் ரஜினிக்கு சங்கடத்தை தந்ததால் தோள் கொடுத்து தூக்கிவிட நினைத்தார்.

அதனால் ரஜினி ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட்டான ஒரு படத்தின் ரீமேக் உரிமையை விலை கொடுத்து வாங்கினார். அந்தக் கதையை கலைப்புலி தாணுவிடம் கொடுத்து விஜயகாந்த் கதாநாயகனாக போட்டு படத்தை எடுக்க சொன்னார் சூப்பர் ஸ்டார். அதன்பின் அந்தப் படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடி விஜயகாந்த்-திற்கு நல்ல ஒரு கம்பேக் கொடுத்தது.

Also Read: மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 4 படங்கள்.. அதில் முதல் படம்தான் செம மாஸ்

அந்தப் படத்தில் விஜயகாந்த்க்கு ஜோடியாக ரூபினி நடித்தார் ராஜசேகர் இயக்கிய கூலிக்காரன் திரைப்படத்தைதான் ரஜினி விலை கொடுத்து வாங்கிய ஹிந்தி படத்தின் ரீமேக். இந்த படத்தில் விஜயகாந்த் உடன் ஜெய்சங்கர், நாகேஷ், ஸ்ரீவித்யா உள்ளிட்ட திரைபட்டாளமே இணைந்து நடித்திருக்கும்.

விஜயகாந்தின் முதல் பிரம்மாண்டமான இந்தத் திரைப்படத்திற்கு டி.ராஜேந்திரன் இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரே சமயத்தில் போட்டி நடிகராக இருந்த விஜய்காந்தை வளர்த்து விட நினைத்த ரஜினி நல்ல மனசுக்காரர். தான் வளர்ந்தது மட்டுமல்லாமல் தன்னுடன் ஒரே சமயத்தில் வளர்த்துக் கொண்டிருந்த விஜயகாந்தின் மீதும் ரஜினி அக்கறை கொண்டு, துவண்டபோது தோள் கொடுத்து தூக்கி விட்டது திரை பிரபலங்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

Also Read: சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஓகே.. விஜயகாந்தை அசிங்கப்படுத்திய ஹீரோயின்

Trending News