2024 – ல் 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகியுள்ளன. தோல்விப் படங்களில் நடித்த நடிகர்களைப் பற்றி இதில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கமல், ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு , தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உள்ளனர்.
இவர்களின் படங்களில் கூட கதை, திரைக்கதை, தொழில்நுட்பம் சரியாக இல்லையென்றால் ரசிகர்கள் விமர்சனம் செய்வர். சினிமா விமர்சகர்களும்தான்.
அப்படியிருக்கும் போது, அடுத்த தலைமுறை நடிகர்களின் படங்களும்தான். அதேசமயம், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து நடிகர்களாக மாறிய பல பேர் உள்ளனர்.
அந்த வரிசையில், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் இருவரும் இசையமைத்து வருவதுடன், சினிமாவிலும் நடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு இருவரின் நடிப்பில் வெளியான படங்கள் அதிக அளவில் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து இசையமைக்கலாமே!
அதன்படி, விஜய் ஆண்டனி நடிப்பில், ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் ஆகிய 3 படங்கள் வெளியாகி அவை கலவையான விமர்சன்ங்களைப் பெற்றன.
அதேபோல், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ரெஃபெல், கள்வன், டியர் ஆகிய படங்களில் நடித்து அவை 3 ம் கலவையான விமர்சன்ங்களைப் பெற்றன என தகவல் வெளியாகின்றன.
மேலும், ஜிவி. பிரகாஷ் இசையமைப்பில் வெளியான அமரன், லக்கி பாஸ்கர் படங்களில் அவரின் இசை பெரிதாகப் பேசப்பட்டன.
எனவே ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி இருவரும் இசையமைப்பாளர்களாக கவனம் செலுத்தினால் சாதிக்கலாம் எனத் தகவல் வெளியாகிறது.