செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

24 மணி நேரத்தில் துணிவு, வாரிசு படக்குழுவை அதிரவைத்த சம்பவம்.. சத்தமே இல்லாமல் காயை நகர்த்திய கருப்பு ஆடு

கடந்த ஒரு வாரமாகவே இணையத்தை ஆட்சி செய்தது துணிவு மற்றும் வாரிசு படத்தை பற்றி செய்தி தான். அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் இந்த இரண்டு படங்களுமே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு தொடர்ந்து பெற்று வருகிறது.

துணிவு படம் பக்கா ஆக்சன் திரில்லர் படமாக வெளியான நிலையில் வாரிசு படம் குடும்பம், சென்டிமென்ட் என்ற ஜானரில் வெளியாகி இருந்தது. மேலும் விஜய், அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் மற்றும் வலிமை படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இப்போது வாரிசு, துணிவு மக்களுக்கு பிடித்துள்ளது.

Also Read : வாரிசில் தெறிக்கவிட்ட ஒரே ஒரு அரசியல் வசனம்.. அஸ்திவாரத்தை ஆழமாக போட்ட விஜய்

ஆனால் இணையத்தில் வாரிசு மற்றும் துணிவு படங்களை ரசிகர்கள் மாறி மாறி கலாய்த்து கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி தாறுமாறாக மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இந்த படங்களை ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் சத்தமே இல்லாமல் ஒரு கருப்பு ஆடு காய் நகர்த்தி உள்ளது.

அதாவது சாதாரணமாக புது படங்கள் ரிலீசான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியாகி விடுகிறது. இதற்காக எவ்வளவோ முன்னேற்பாடுகள் செய்தாலும் எப்படியோ தமிழ் ராக்கர்ஸ் இந்த படங்களை வெளியிட்டு விடுகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் இந்த பிரச்சனை இருக்காது என எதிர்பார்த்த நிலையில் இப்போது பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.

Also Read : வாரிசு, துணிவு முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கிங் என மீண்டும் நிரூபித்த தளபதி விஜய்

அதாவது சத்தமே இல்லாமல் துணிவு மற்றும் வாரிசு படத்தின் ஹெச்டி பிரிண்ட்டை தமிழ் ராக்கர்ஸ் வெளியீட்டு உள்ளது. அதுவும் படம் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாகவே வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி பலருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

ஆகையால் வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மாறி மாறி அவர்களை கிண்டல் செய்வதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Also Read : ஓவர் அலப்பறை கொடுத்த வாரிசு டீம்.. சைலண்டாக அடித்து நொறுக்கிய துணிவு

Trending News