வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

புஸ்வானம் மாதிரி புஸ்ன்னு போன சைக்கோ பிரச்சனை.. கோபியை காப்பாற்றும் பாக்யா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இதுவரை தேவையில்லாத ஆணியாக இருந்த அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் பிரச்சினை ஒரு அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது பாக்கியா வீட்டில் வந்து பிரச்சனை செய்து எப்படியாவது அமிர்தாவை கூட்டிட்டு போகலாம் என்று வந்த கணேசனுக்கு அங்கே ஏமாற்றமாக தான் முடிந்தது.

இதனை அடுத்து நேரடியாக போலீஸ் இடம் கம்ப்ளைன்ட் கொடுத்து விசாரிப்பதற்காக பாக்யா வீட்டிற்கு வருகிறார்கள். ஆனால் அங்கே வந்த போலீஸ் அமிர்தா மற்றும் நிலா பாப்பாவின் செயல்களை பார்த்து ஒரு முடிவு எடுத்து விட்டார். அத்துடன் அமிர்தாவிடம் கேட்டதற்கு எழில் தான் எனக்கு வேணும் என்று சொல்லியதால் இதுக்கு மேலயும் இந்த விஷயத்தில் பேசுவதற்கு ஒன்னும் இல்லை என்று போலீஸ் முடிவு பண்ணி விட்டது.

அந்த வகையில் கணேசனிடம் இந்த குடும்பத்தில் ஒரு நல்ல மருமகளாகவும், மனைவியாகவும் வாழ்ந்து வருகிறார். அதனால் இனி அமிர்தாவின் குடும்பம் இதுதான், இனிமேல் இங்கே வந்து நீ எந்த பிரச்சினையும் பண்ண கூடாது. அதனால் ஒரேடியாக ஒதுங்கி விடு என்று கணேசனிடம் எச்சரிக்கை கொடுத்து விட்டார். இதனால் கணேசனின் சைக்கோ கேரக்டருக்கு ஒரு முடிவு கட்டி விட்டாச்சு.

Also read: கண்ணகி போல் நியாயம் கேட்டு வந்த சக்காளத்தி.. பாக்கியலட்சுமி வீட்டையே புரட்டி போடும் சம்பவம்

அடுத்தபடியாக கோபி கடன் பிரச்சினையால் பல மாதங்களாக தவித்து வந்தார். இந்நிலையில் பிரச்சனை அதிக அளவில் முத்தியதால் மேற்கொண்டும் பிசினஸை செயல்படுத்த முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டார். அதனால் கம்பெனியை க்ளோஸ் பண்ணிவிடலாம் என்று முடிவுக்கு பண்ணி அங்கே வேலை பார்க்கும் பணியாளர்களிடம் கோபி சொல்லி விடுகிறார்.

அதனால் அனைவரும் அதிர்ச்சியாகவே நிற்கிறார்கள். அடுத்தபடியாக கம்பெனியை எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கினோம் என்று ஒவ்வொரு விஷயத்தையும் நினைத்து ரொம்பவே மனம் உருகி வேதனைப்படுகிறார். இந்த நேரத்தில் பாக்யாவிடம் எழில் வந்து ரெஸ்டாரன்ட் நம்ம கைக்கு வரப்போகிறது. அந்த ஓனருக்கு பணத்தை கொடுத்து செட்டில் பண்ணி விட்டால் இனி நீ தான் அந்த ரெஸ்டாரண்டுக்கு ஓனர் என்கிற மாதிரி சொல்கிறார்.

இதனால் இது விஷயமாக பாக்யா பேசப்போகிறார். கண்டிப்பாக இந்த நேரத்தில் பாக்யாவிற்கு கோபிப்படும் கஷ்டம் தெரியவரும். அதனால் பார்த்தும் பார்க்காத மாதிரி பாக்கியாவால் விட முடியாது. தற்போது கோபியின் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பாக்கியா தான் பணம் கொடுத்து உதவப் போகிறார்.

Also read: குணசேகரனை ஓரங்கட்ட போகும் எதிர்நீச்சல் டீம்.. மொத்த டிஆர்பியும் சொதப்பிய கொம்பேறி மூக்கன்

Trending News