திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பால் பாயாசத்துக்கு வாயை பிளக்கும் கோபி.. பாலாஜியின் ரியாக்ஷன் ஒன்னு வச்சு வாழவே வக்கு இல்ல எப்புட்றா.!

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் இந்த வாரம் முழுவதும் செம காமெடியாக வர இருக்கிறது. அதாவது எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்று லட்சியத்துடன் 18 லட்ச ரூபாய்க்காக சமையல் செய்ய வருகிறார் பாக்கியலட்சுமி. இன்னொரு பக்கம் ராதிகாவின் முந்தானையில் சுற்றிக்கொண்டு போற இடத்துக்கெல்லாம் கோபி வாலை சுருட்டி கிட்டு போறாரு.

அதன்படி இவர்கள் அனைவரும் வந்திருக்கும் அந்த கல்யாண வீடு காமெடியில் தத்தளிக்க போகிறது. அங்கே பழனிச்சாமியை பார்த்த கோபி, பாக்கியாவை நினைத்து புலம்புகிறார். இது அப்பட்டமாக தெரிந்து கொண்ட ராதிகா, பாக்கியா எப்படி இருந்தா உங்களுக்கு என்ன கோபி என்று கேட்கிறார்.

Also read: அப்பா கோபியை மிஞ்சும் அளவிற்கு போன மகன்.. ரெண்டு பொண்டாட்டி கதையை உருட்டும் பாக்கியலட்சுமி

அடுத்தபடியாக பழனிச்சாமியை கோபி தனியாக சந்தித்து, பாக்கியா போற இடத்துக்கெல்லாம் பின்னாடியே வந்து விடுவியா என்று காரசாரமாக பேசுகிறார். இதை பார்த்த தாடி பாலாஜி செல்வி அக்காவிடம் இவர்கள் ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறார்கள் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார். அதற்கு செல்வி அக்கா இவர்தான் பாக்கியாவின் கணவர் என்று சொல்கிறார்.

இதற்கு இடையில் ராதிகாவை அறிமுகப்படுத்தும்போது கோபியை பார்த்து இதுதான் ராதிகாவின் கணவர் என்று சொல்லி இருக்கிறார். இப்பொழுது பாலாஜியின் ரியாக்ஷன் அது எப்புட்றா? எனக்கு ஒன்னுக்கே வழியில்ல என்று சொல்வது போல் இருக்கிறது. பாவம் அவர் பட்ட கஷ்டங்கள் அப்படி. ஆனால் கோபிக்கு என்ன அப்படியா?

Also read: மட சாம்பிராணியாக இருக்கும் தனம்.. அனுதாபத்தை வைத்து டிஆர்பி ரேட்டை ஏத்தும் விஜய் டிவி

அடுத்ததாக பாக்கியா பெண் வீட்டார்களிடம் பால் பாயசம் ரெடியாக இருக்கிறது. அது எப்படி இருக்கு என்றே டேஸ்ட் பண்ணி பார்க்கிறீர்களா என்று கேட்கிறார். இதை கேட்டதும் கோபிக்கு அப்படியே வாயில எச்சில் ஊறிட்டு. அந்த அளவிற்கு பாக்கியாவின் சமையலுக்கு அடிமையாக இருக்கிறார்.

ஒரு பக்கம் என்னதான் இந்த மாதிரி கதைகளை வைத்து உருட்டிக் கொண்டு வந்தாலும், இது என்னடா சீரியல்  போதும் சீக்கிரமா இந்த நாடகத்தை முடித்து தொலைங்க என்று சொல்வது போல் காரசாரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

Also read: பச்சோந்தி மாதிரி குணத்தை மாற்றும் குணசேகரன்.. மானங்கெட்ட மருமகனுக்கு மாப்பிள்ளை விருந்து

Trending News