Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயலின் இமேஜை டேமேஜ் பண்ணி கயலிடமிருந்து ஏழிலை பிரிக்க வேண்டும் என்று சிவசங்கரி ப்ளான் போட்டார். சிவசங்கரியின் பிளான் படி கௌதம், கயலை தவறாக சித்தரித்து போலீஸிடம் சிக்க வைத்து விட்டார். இது தெரியாத கயலின் குடும்பம் கயல் எங்கே போயிருக்கிறார் போன் எடுக்கவில்லை என்று பதட்டத்துடன் தேடி அலைகிறார்கள்.
ஆனால் கயல், கௌதம் வலையில் சிக்கி போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக் கொண்டார். கயல் போலீசிடம் மாட்டிக் கொண்ட விவரம் பெரியப்பாவுக்கு மட்டும் தெரிந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் கயலே வெளியே எடுக்க வேண்டும் என்று பரிதவிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் லாயரை கூட்டிட்டு வந்து கமிஷனரிடம் பேசி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அப்பா ஸ்தானத்தில் செண்டிமெண்டாக பேசி கயலே வெளியே கூட்டிட்டு வந்து விட்டார்.
இதற்கு இடையில் கயலுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று வீட்டில் காத்துக் கொண்டிருப்பவர்களிடம் பெரியம்மா, கயலை பற்றி தவறாகவும் இந்த விருதுக்கு கயல் லாயக்கு இல்லை. நீங்கள் கொண்டு போங்க கயல் வந்தால் உங்களை தேடி வந்து வாங்கிட்டு போகட்டும் என்று வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்து விட்டார். பிறகு கயில் குடும்பத்தார்கள் பெரியம்மாவை திட்டின நிலையில் பெரியம்மா கோபப்பட்டு வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்.
இதை தாண்டி பெரியப்பா கயலை நல்லபடியாக வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார். பிறகு கயல் விருது வாங்கிய நிலையில் கயல் இருந்த சூழ்நிலையை குடும்பத்திற்கு தெரியப்படுத்துகிறார். அடுத்து பெரியப்பா காலில் விழுந்து கயல் நன்றி செலுத்தி விட்டார். அடுத்ததாக கயலை தனியாக கூப்பிட்டு உனக்கு இப்படி ஒரு கலங்கத்தை ஏற்படுத்தியது யார் என்று உனக்குத் தெரியும்.
என்னிடம் எந்த உண்மையையும் மறைக்க மாட்டாய் என்ற நம்பிக்கையில் நான் உன்னிடம் கேட்கிறேன். இந்த நிலைமைக்கு காரணம் யார் என்று எழில் கேட்கிறார். அந்த வகையில் கயல், கௌதம் தான் என்ற உண்மையை சொல்லிவிடுவார். இதை தெரிந்து கொண்ட எழில், கௌதமின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறார். ஆனால் அப்பொழுது கௌதமுக்கு பின்னாடி இருந்து பிளான் பண்ணியது சிவசங்கரி தான் என்ற உண்மையையும் தெரிந்துவிடும்.
அத்துடன் இனி என்னுடைய அம்மாவை நீ இல்லை என்று சிவசங்கரியை எழில் தலைமுழுகி விடுவார். எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டேன் என்பதற்கு ஏற்ப பிடிவாதமாக சிவசங்கரி தொடர்ந்து அராஜகம் பண்ணிக் கொண்டு வருகிறார். ஆனால் பெரியப்பாவின் செண்டிமெண்டை பார்க்கும்போது உண்மையிலேயே கயல் பூரிப்படைய வைத்து விட்டது.