வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

மகாநதி சீரியலில் விஜய்க்காக காவிரியிடம் தூது போகும் நவீன்.. சந்தேகத்தில் யமுனா, சாரதா எடுக்கப் போகும் முடிவு

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி மற்றும் விஜயின் பிரிவுக்கு ஒரு வகையில் யமுனா காரணமாக இருந்தாலும் இதற்கு முழுக்க முழுக்க விஜயும் பொறுப்பு தான். அவர் மனதில் வந்த காதலை வெளிப்படுத்தாமல் பொறாமையில் பொங்கும் காவிரியை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்ட விஜய் செய்த சர்ப்ரைஸ் மூலம் தான் இந்த விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

காவிரியும் தன்னுடைய மனதிற்கு வந்த காதலை வெளிப்படுத்தாமல் அமைதியாக நின்று விட்டார். கடைசியில் யமுனா சொன்ன உண்மையினால் காவேரியின் அம்மா ஆத்திரமடைந்து காவிரியை கூட்டிட்டு போய் விட்டார். ஆனாலும் காவேரி மற்றும் விஜய் இருவருமே மனசார காதலித்து வருவதால் ஒருவரை ஒருவர் நினைத்து வாடி வருகிறார்கள்.

அத்துடன் எப்படியாவது காவிரியுடன் பேசி காவிரி குடும்பத்தையும் நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக விஜய் முயற்சி எடுக்கப் போகிறார். இதற்கிடையில் இவர்கள் இருவருடைய மனசையும் மற்றவர்கள் யாரும் புரிந்து கொள்ளாமல் ஒப்பந்த கல்யாணத்தை போட்டதை வைத்தே சொல்லி காவேரி மற்றும் விஜய்யை காயப்படுத்தி வருகிறார்கள்.

அதிலும் காவிரி அம்மா சாரதா மற்றும் யமுனா இருவருமே விஜய் ஏதோ பெரிய துரோகம் பண்ணிட்டதாக நினைத்து காவிரியிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்க பார்க்கிறார்கள். ஆனால் நவீன் மட்டுமே காவிரி வாழ்க்கையை சரி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த வகையில் விஜய் மனசை புரிந்து கொண்டு காவிரிக்காக நவீன் தூது போகிறார்.

அதாவது காவிரியிடம் விஜயுடன் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு இருப்பதாகத்தான் நான் நம்புகிறேன். தற்போது நடக்கிற பிரச்சனைக்கு நானும் ஒரு விதத்தில் காரணம் என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார். அதற்கு காவேரி ஒப்பந்த கல்யாணத்தைப் பற்றி நீங்கள் சொல்லாமல் இருந்திருந்தாலும் விஜய் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைக்க தான் ரெடியாக இருந்தார் என நவீனிடம் காவிரி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இவர்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது யமுனா அங்கிருந்து பார்த்து பயப்பட ஆரம்பித்து விட்டார். ஐயோ இவர்கள் இரண்டு பேரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று சந்தேகத்துடன் வேவு பார்க்க ஆரம்பித்து விட்டார். இதையெல்லாம் பார்த்த காவிரியின் அம்மா சாரதா, யமுனாவின் பரிதவிப்பை புரிந்து இனிமேலும் இந்த வீட்டில் இருந்தால் அக்கா தங்கச்சிக்குள்ளையே சண்டை வந்துவிடும்.

அதனால் இன்னைக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். இந்த யமுனாவும் பச்சோந்தி மாதிரி நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டிருப்பதால் யமுனாவை நம்பி காவேரி குடும்பம் இங்கே வந்து அசிங்கப்படாமல் இருக்க வேண்டும். அதனால் சாரதா எல்லோரையும் கூட்டிட்டு வீட்டை விட்டு போகப் போகிறார். மேலும் நவீன், காவிரி வாழ்க்கை சரி செய்ய வேண்டும் என்பதற்காக விஜய் இடம் காவிரியை சேர்த்து வைக்க போகிறார்.

Trending News