வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒத்த வார்த்தையில் கரிகாலனை அடக்கிய ஆதிரை..  ஜனனியை ஏமாற்றும் கௌதம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாளாக கோமாளியாகவும், காமெடியாகவும் வந்த கரிகாலன், தற்போது ஆதிரை சொன்ன அந்த ஒத்த வார்த்தையால் அழுது புலம்பி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்து விட்டார். என்னதான் இவர் மேல் தப்பு இருந்தாலும் அதை எல்லாத்தையும் மறக்கடிக்கும் விதமாக இவருடைய பெர்பார்மன்ஸ் அடித்து தூக்கி விட்டது.

முக்கியமாக கரிகாலன் மனசு நொறுங்கிய நிலையில் ஆறுதலுக்காக அம்மாவுக்கு போன் பண்ணி, இவருடைய கஷ்டத்தை சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் தவித்த தவிப்பு பார்ப்பதற்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது. அதிலும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதை வேறு யாரிடமும் சொல்ல முடியாமல் அம்மாவிடம் சொல்லி மணக்குறையை போக்கிக்கொண்டார்.

Also read: பாக்கியாவால் வில்லனாக மாறி புலம்பி தவிக்கும் கோபி.. உசுப்பேத்தி விடும் ராதிகா

அடுத்தபடியாக என்ன தான் ஜான்சி ராணி அடாவடியாக இருந்தாலும் பெத்த பையன் நிலைமை கண்டு ரொம்பவே உடைந்து போகிறார். அதனால் மறுநாள் காலையில் கரிகாலனுக்கு மற்றும் குணசேகரன் அனைவருக்கும் விருந்து சாப்பாடு தடபுடலாக செய்து கொண்டு வருகிறார். அப்பொழுது கரிகாலன் இத்தனை நாள் சாப்பாட்டுக்காக எவ்வளவு ஏங்கிக் கொண்டிருந்தார் என்பது அவர் சாப்பிடும் விதத்தை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

குணசேகரனை பழி வாங்குவதற்காக கரிகாலனுக்கு இப்படி சாப்பாடு போடாமல் விட்டது கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது. அடுத்தபடியாக ஜனனி, அப்பத்தாவின் கைரேகையை யார் எடுத்தார் என்ற மர்ம நபரை கண்டுபிடிக்கும் விதமாக கௌதமிடம் முழு பொறுப்பையும் ஒப்படைந்திருந்தார். அதை பற்றி கௌதமிடம் கேட்கும் பொழுது அப்பத்தாவின் சொத்து விஷயத்தில் இனிமேல் நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொல்லிவிடுகிறார்.

Also read: கண்ணனை தண்டித்த நேரத்தில் பிறந்த குழந்தை.. மீண்டும் குவா சத்தம் கேட்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஆனால் ஜனனி அதை எப்படி முடியும் கண்டிப்பாக நாங்கள் யார் என்று கண்டுபிடிப்போம். நீ ஏன் இதெல்லாம் சொல்கிறாய் அப்போ உனக்கு ஏதோ ஒரு விஷயம் இதைப் பற்றி தெரிந்து இருக்கிறது என்று கேட்கிறார். கண்டிப்பாக கௌதம் ஜீவானந்தத்தை பற்றி எதுவும் சொல்லப் போறது இல்லை.

எல்லா விஷயத்தையும் ஜனனி கண்டுபிடித்தால் மட்டும் தான் குணசேகரனை ஜெயிக்க முடியும். இல்லை என்றால் ஆதிரை விஷயத்தில் எப்படி தோற்றுப் போனார்களோ அதை போல் ஜீவானந்திடமும் கடைசியில் தோற்க வேண்டிய நிலைமை வந்துவிடும். என்னதான் நடக்கும் என்று புரியாத புதிராக ஒவ்வொரு எபிசோடும் நகர்ந்து வருகிறது.

Also read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

Trending News