திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மாமனாரை தொடர்ந்து மீனாவின் உயிருக்கு குறி வைக்கும் சைக்கோ.. தப்புக்கு மேல் தப்பு பண்றீங்க

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் கிட்டத்தட்ட 1300 எபிசோடுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவடையாமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. அட்லீஸ்ட் பார்ப்பதற்கு ஏதாவது நல்ல கதைகள் இருந்தால் கூட எங்களுக்கு ஓகே. ஆனால் இதில் அப்படி ஏதும் கதை இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் பிரச்சனையை மட்டுமே வைத்து உருட்டிக்கொண்டு ஏன் எரிச்சலை உண்டாக்குகிறீர்கள் என்று இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தன்னுடைய அப்பாவை கொலை செய்தது ஜீவா மற்றும் கதிர் தான் என்று பிரசாந்த் சொல்லியதை கண்மூடித்தனமாக நம்புகிறார் மீனா. அத்துடன் போலீஸ் இவர்களை அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் போட்டு கோர்ட்டுக்கு முன் நிறுத்துகிறார்கள். இதற்கிடையில் தன் புருஷன் எந்த தவறும் செய்திருக்க மாட்டார் என்று முல்லை கதிரை மலை போல் நம்பி மீனாவிடம் நியாயம் கேட்கிறார்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பூசணிக்காய் உடைக்க நேரம் வந்தாச்சு.. மீனாவின் சந்தேகத்தால் வரப்போகும் விடிவுகாலம்

ஆனால் மீனா, முல்லையை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். அடுத்து கண்ணன் அவருடைய பங்குக்கு மீனாவிடம் எங்க அண்ணன் காசுக்காக இதெல்லாம் செய்யக்கூடிய ஆளா, இதை நீங்க நம்புறீங்களா என்று கேட்கிறார். ஆனாலும் மீனா, கண்ணன் என்ன சொல்ல வருகிறார் என்று பேசவிடாமல் அவரையும் தடுத்து வாயடைக்கிறார்.

இதுல வேற மீனா உருகி உருகி ஜீவாவை காதலித்து போராட்டம் பண்ணி கல்யாணத்தை செய்து பிள்ளையும் பெற்றிருக்காங்க. ஆனாலும் தன் புருஷன் எப்படிப்பட்டவர் என்று இப்ப வரை தெரியாத ஒரு மங்குனி மனைவியாக தான் இருக்கிறார். அடுத்தபடியாக பிரசாந்த் அடிக்கடி தன்னுடைய அப்பாவை பார்த்துவிட்டு போகிறார் என்று கொஞ்சம் சந்தேகம் எழும்புகிறது.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறிய மருமகள்.. மீண்டும் சுக்குநூறாக உடையும் குடும்பம்

இந்நிலையில் மீனா அப்பாவை பார்த்து என்ன நடக்குது என்று எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது. நீங்கள் கண்விழித்து ஏதாவது சொன்னால் மட்டுமே எல்லா உண்மையும் புரியும் என்று புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பிரசாந்த் உள்ளே வருகிறார் என்று தெரிந்ததும் மீனா மறைந்து நின்று பார்க்கிறார்.

அப்பொழுது உள்ளே வந்த பிரசாந்த் சைக்கோ மாதிரி, மீனாவின் அப்பாவிடம் வயசான காலத்துல உனக்கு இந்த பிரச்சனை எல்லாம் தேவையா? நான் பண்ண எல்லா தப்புக்கும் உன் மூத்த மருமகன் தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கான். இதுல நீ கண் விழித்துவிட்டன எனக்கு தான் பிரச்சனையாகும் என்று எல்லா உண்மையும் உளறுகிறார். இதைக் கேட்டதும் மீனா அப்படியே அதிர்ச்சியாகி கண்ணீர் வடிக்கிறார்.  இந்த உண்மை மீனாவுக்கு தெரிந்து விட்டது என்று பிரசாந்திற்கு தெரிந்தது என்றால் இவருடைய உயிருக்கும் குறி வைக்கப் போறார் சைக்கோ.

Also read: ஜெயிலுக்குப் போகும் ஜீவா கதிர்.. பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு எண்டு கார்டே இல்ல

Trending News