தொலைக்காட்சி

எதிர்நீச்சலில் விசாலாட்சி ஈஸ்வரியை சரமாரியாக தாக்கினார்.. சுயநினைவை இழந்த ஈஸ்வரி

By · 25 ஜூன் 2025 · Updated 25 ஜூன் 2025
In the ethirneechal, Visalakshi attacked Ishwari in a barrage. Ishwari lost consciousness.

Ethirneechal : சன் டிவியில் அதிக வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த எதிர்நீச்சல் சீரியல் அடக்குமுறை செய்யும் ஆண்களுக்கு எதிராக பெண்கள் முன்னேறுவதை மையமாகக் கொண்டு இந்த கதை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீட்டில் உள்ள பெண்கள் ஆண்களுக்கு எதிராக ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

தற்போது அவர்கள் எதிர்ப்பு கொள்ளப் போகும் பிரச்சனை தர்ஷனின் திருமணம். முதலில் தர்ஷன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தாலும் பிறகு எது நன்மை என புரிந்து கொண்டு திருமணம் வேண்டாம் என கூறினார். ஆனால் அதை வீட்டில் உள்ள அனைத்து ஆண்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தர்ஷன் அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

இப்போது தர்ஷன் எங்கே இருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை தர்ஷனை அறிவுக்கரசி ஒரு பக்கம், குணசேகரனின் தம்பிகள் ஒரு பக்கம் தேடி வருகின்றனர். இவ்வாறு இருக்க ஈஸ்வரி தான் தர்ஷனை திட்டம் போட்டு ஜீவானந்தத்திடம் அனுப்பி உள்ளார் என வீட்டில் உள்ள ஆண்களை மற்றும் தாய் விசாலச்சியையும் தூண்டி விடுகிறார் குணசேகரன்.

சுயநினைவை இழந்த ஈஸ்வரி…

இப்போது அனைவரின் பார்வையிலும் ஈஸ்வரியே குற்றவாளி. ஈஸ்வரி எவ்வளவு எடுத்துக் கூறியும் யாரும் புரிந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் விசாலாட்சி ஈஸ்வரியை கடும் சொற்களால் சரமாரியாக தாக்கியுள்ளார். ஈஸ்வரியிடம் ஆறு மாத காலம் நீ ஜீவானந்தத்துடன் இருந்தாய் அதனால் நாங்கள் உனக்கு பெரிதாக தெரியவில்லை. “விட்ட குறையோ தொட்ட குறையோ” என வித்தியாசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஈஸ்வரியில் நடத்தைகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார் விசாலாட்சி.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஈஸ்வரி, இதையெல்லாம் யோசித்து மயங்கி விழுந்து சுயநினைவை இழக்கிறார். இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க குணசேகரன் சக்தியிடம் நீ கொடைக்கானலுக்கு சென்று ஜீவானந்தம் இருக்கும் இடம், நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை நோட்டமிடுமாறு சக்தியை கொடைக்கானலுக்கு அனுப்ப திட்டம் தீட்டுகிறார்.

ஆக, ஈஸ்வரியை தூண்டில் புழுவாக பயன்படுத்தி ஜீவானந்தம் இருக்கும் இடத்தை அறிந்து ஜீவானந்தத்தையும் நேரடியாக தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார் குணசேகரன். அது மட்டும் அல்லாமல் அறிவுக்கரசி, தர்ஷன் மற்றும் பார்கவி கண்டுபிடித்து கொல்வதற்காக தேடிக் கொண்டிருக்கிறார். எப்போதான் ஜீவானந்தம் வரப்போகிறார் என்பது தெரியவில்லை. இந்த பிரச்சினையையும் எதிர்கொண்டு பெண்கள் வெற்றி பெறுவார்களா என்ற ஆவலுடன் இந்த வார கதைக்களம் செல்ல போகிறது.