மகாநதி சீரியலில் என் பொண்டாட்டியை என்னிடம் கொடுத்துடுங்க.. மாமியாரிடம் காவிரிக்காக கெஞ்சும் விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில் காவேரி, குடும்பத்துக்காக அப்பளம் போட்டு கஷ்டப்படுகிறார் என்று பீல் பண்ணிய விஜய், காவேரி அப்பளக்கட்டை கொடுத்த கடையில் மொத்த அப்பளக்கட்டையும் வாங்கி அவர் தங்கியிருக்கும் ஓனரிடம் கொடுத்து இதை உங்கள் தெரிந்த அனைவருக்கும் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

இது தெரிந்து கொண்ட கங்கா, காவேரியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது சாரதா கேட்டு விடுகிறார். உடனே சாரதா இதை வைத்து பிரச்சினை பண்ணும் விதமாக நீயும் விஜயும் கூட்டு சேர்ந்து இந்த மாதிரி பண்ணுகிறீர்களா என்று காவிரியை பார்த்து கேட்டு விடுகிறார். உடனே காவிரி எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி நேரடியாக அம்மாவை கூட்டிட்டு கடையில் போய் விசாரிக்கிறார்.

அப்பொழுது விஜய்யின் ஒருத்தர் வந்து எல்லா அப்பளத்தையும் வாங்கிட்டு போனதாக சொன்னதும் சாரதாவிற்கு கோபம் அதிகரித்து விட்டது. உடனே விஜய பார்த்து கோபமாக பேசி சண்டை போடுகிறார். அதற்கு விஜய் எனக்கு உங்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை, எனக்கு தேவை என்னுடைய பொண்டாட்டி. என் பொண்டாட்டியை மட்டும் திருப்பி என்னிடம் கொடுத்து விடுங்கள்.

அதுவே எனக்கு போதும் என்று விஜய் அவருடைய காதலை மாமியாரிடம் வெளிப்படுத்தி காவிரிக்காக கெஞ்சுகிறார். விஜய் கெஞ்சுவதை பார்த்த சாரதா எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு வீட்டிற்கு போய் விடுகிறார். போனதும் காவிரியை நீ அவன்கூடயே போய் சந்தோஷமாக இருந்து வாழு. என்னமோ உங்கள் ரெண்டு பேரையும் நான் பிரித்து வைத்துக் கொண்டு இருக்கிற மாதிரி அவன் பேசுகிறான்.

எனக்கு என் மகள் சந்தோசமாக இருக்கணும் அவ்வளவுதான், நாளைக்கு அவனை நம்பிக் கொண்டு இருந்த பின்பு அவன் வெண்ணிலா தான் வேணும் என்று வெண்ணிலா பின்னாடி போனால் என்ன பண்ண முடியும் அதான் என்னுடைய பயம். இதற்கு பிறகு நீ எதுனாலும் முடிவு பண்ணு என்று கோபமாக பேசி விடுகிறார். உடனே காவிரி, இனி எந்த ஒரு விஷயத்தையும் நான் என் இஷ்டப்படி பண்ண மாட்டேன்.

நீ மனசார எத சொல்றியோ அது தான் கேட்பேன் என்று சொல்லி விஜய் பார்த்து பேச போகிறார். அப்படி போனதும் விஜய்யிடம் இங்கிருந்து போய் விடுங்கள் என்று காவேரி சொல்லப் போகிறார். உடனே விஜய் நீ இல்லாத வாழ்க்கை என்னால் வாழ முடியாது நீ தான் என்னுடைய உலகம் என்று காதலை வெளிப்படுத்தி காவிரிக்கு புரிய வைக்க முயற்சி எடுக்கப் போகிறார்.

Leave a Comment