Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியில் ‘டிரெயின்’..இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது ட்ரெய்லர்!

மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியில் ‘டிரெயின்’..இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் மிஷ்கின், நடிகர் விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக இணைந்துள்ளபடம் ‘டிரெயின்’.நீண்ட நாட்களாக ரிலீஸுக்காகக் காத்திருக்கும் இப்படம் தற்போது இறுதிக்கட்ட விளம்பரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.அந்த வகையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


மேலும்,இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.இதற்கான அறிவிப்புடன் வெளியான புதிய போஸ்டரில் விஜய் சேதுபதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் தோற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


ஏற்கனவே ஜூலை 12-ம் தேதி வெளியான படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் யூடியூபில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. அக்டோபர் 30-ம் தேதி வெளியான ரிலீஸ் டீசரும் 26 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


ஒரு ரயில் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன், நாசர்,நரேன்,யூகி சேது,கே.எஸ். ரவிக்குமார்,சம்பத் ராஜ்,கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு மிஷ்கினே கதை,ஸ்கீரின்ப்ளே,டைரக்ஷன் மற்றும் இசையமைப்புப் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.


ஃபௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஸ்ரீ வாட்சன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மேலும்,படத்திற்கு யு/ஏ சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர்கள், பாடல்கள்,டீசர்கள் என ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று வெளியாகும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு உயர்த்தப்போகிறது என்பதே தற்போதைய கேள்வி.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.