திங்கட்கிழமை, மார்ச் 10, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலில் ஓவராக குதித்த கதிருக்கு ஆப்பு வச்ச குணசேகரன்.. சக்தி ஜனனி போட்ட பிளான், நிற்கும் தர்ஷன் கல்யாணம்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் வீட்டிற்குள் வந்துவிட்டால் நாம் இந்த வீட்டில் இருக்க தேவை இல்லை என்று முடிவு பண்ணி நான்கு பெண்களும் சொந்தக் காலில் நின்னு எதிர்நீச்சல் போடுவதற்கு தயாராகி விட்டார்கள். அந்த வகையில் இனி தனியாக நின்று ஒவ்வொருவரும் அவர்களுடைய இலட்சியத்தில் ஜெயிக்கலாம் என்று முடிவு பண்ணி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.

அதன்படி ஒவ்வொருவரும் அவர்களுடைய திறமைகளை வைத்து சாதிக்க போகிறார்கள். இவர்கள் நான்கு பேரும் வீட்டை விட்டு வெளியே வந்ததே குணசேகரனுக்கு விழுந்த முதல் அடி. அத்துடன் இந்த நான்கு பெண்கள் மூலம் குணசேகருக்கு ஏதாவது பிரச்சினை வரும் அதை வைத்து மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்பலாம் என்று கதிர் ஒரு பிளான் போட்டு வைத்திருந்தார்.

அந்த வகையில் கதிர் போட்ட பிளானும் மொத்தமாக தோத்துப் போய்விட்டது. இது மட்டுமில்லாமல் அறிவுக்கரசி வந்து மொத்த பொறுப்பையும் யாருக்கு ஒப்படைக்கலாம் என்று கதிரை மையமாக வைத்து குணசேகரன் இடம் கேட்கிறார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் குணசேகரன் வச்ச ஒரு ஆப்பு தான் கதிருக்கு மிகப்பெரிய சரிவை கொடுத்துவிட்டது.

அதாவது எல்லா பொறுப்பையும் அண்ணன் நம்மிடம் கொடுப்பார், அதை வைத்து பலரையும் ஏமாற்றி தில்லாலங்கடி வேலைகளை பார்க்கலாம் என்று மாமனார் உடன் ஒரு பிளான் போட்டு வைத்திருந்தார். அதை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக குணசேகரன் சொன்னது என்னுடைய பொறுப்புக்கள் அனைத்தையும் எனக்குப் பிறகு சக்தி தான் எடுத்து பார்ப்பார் என்று சொல்லிவிடுகிறார்.

இதை எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ச்சியாக நிலையில் கதிர் அப்படியே கோபத்தை மறைத்து வைத்து கொந்தளிக்கிறார். ஆனால் இதன் மூலம் கதிர் நிச்சயம் பிரச்சினை பண்ண வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக சக்தி மற்றும் ஜனனி போட்ட பிளான் படி தான் தற்போது எல்லா விஷயமும் நடைபெறுகிறது. அந்த வகையில் தர்ஷன் கல்யாணத்தையும் நிச்சயமாக குணசேகரன் பக்கத்தில் இருந்து கொண்டே சக்தி தடுத்து நிறுத்தி விடுவார்.

இதனை அடுத்து பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய லட்சியத்தில் ஜெயிப்பதற்கு போராடப் போகிறார்கள். அத்துடன் இவர்களுடைய வெற்றி நிச்சயம் குணசேகரன் விட்டு ஆண்களுக்கு மிகப்பெரிய சவுக்கடியாக இருக்கப் போகிறது.

Trending News