வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரெண்டு பொண்டாட்டி ரெண்டு புருஷன் கதையில் பாக்கியலட்சுமி.. மருமகள் எடுக்கப் போகும் முடிவு என்ன

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஆரம்பத்தில் குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும்படியான கதை அமைந்தது. ஆனால் போகப் போக ரெண்டு பொண்டாட்டி கதையாக மொத்த எபிசோடும் மாறிவிட்டது. இதற்கிடையில் பாக்கியாவின் மருமகள் அமிர்தாவிற்கு ரெண்டு புருஷன் கதையையும் வைத்து உருட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது அமிர்தாவின் முன்னாள் கணவர் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்று. அது மட்டுமல்லாமல் பாக்யாவின் வீட்டிற்கு நேரடியாக வந்து அமிர்தாவையும் நிலா பாப்பாவையும் என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று பிரச்சினை பண்ணுகிறார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நிலைகுலைந்து போய் நிற்கிறார் அமிர்தா.

அத்துடன் இந்த விஷயத்துக்கு யாராலுமே பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்து நிற்கிறார்கள். ஆனால் அமிர்தாவின் அம்மா மட்டும் மகளின் வாழ்க்கைக்காக கணேசனிடம் போராடுகிறார். ஆனால் கணேசன் சைக்கோ மாதிரி எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் அமிர்தா என்னுடைய மனைவி அவள் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று பைத்தியக்கார மாதிரி பேசுகிறார்.

Also read: ஜான்சியை விட 100 மடங்கு வில்லியாக வரும் ஜனனியின் புது உறவு.. குணசேகரனிடம் சொத்தை அபகரிக்கும் பிளான்

ஆனால் அமிர்தாவை பொறுத்தவரை புருஷன் எழில் மட்டும்தான் என்கிற நினைப்பில் அவனுடன் போய் நிற்கிறார். மேலும் அமிர்தாவின் கண்ணிற்கு ஆறுதலாக எழிலும் சப்போர்ட் பண்ணுகிறார். இதை பார்த்து ஜீரணிக்க முடியாத கணேசன் கடைசியாக அமிர்தாவிடம் பேசுகிறார். நீனே இதற்கு பதில் சொல்லு, நாம் அனைவரும் சேர்ந்து குடும்பமாக வாழலாம் என்னுடன் வா என்று கூறுகிறார்.

இதைக் கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமிர்தா உறைந்து போய் நிற்கிறார். அத்துடன் கணேசனின் அம்மா அப்பாவும் அமிர்தாவை வீட்டிற்கு கூட்டிட்டு போக வேண்டும் என்ற நினைப்புடன் வந்திருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் இதற்கு ஒரே தீர்வாக அமிர்தா எடுக்க போகும் முடிவு தான் கணேசனுக்கு சவுகடியாக இருக்கப் போகிறது.

அதாவது கணேசன் கட்டின தாலி எதுவும் இல்லை, அத்துடன் அவனுடன் வாழ்ந்த காலமும் மறந்து போயி சந்தோசமான வாழ்க்கையில் நுழைந்து விட்டு எழிலுக்கு மனைவியாக வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் பட்சத்தில் எல்லாத்தையும் உதறிவிட்டு அமிர்தா போக முடியாது. அதனால் கண்டிப்பாக அமிர்தாவின் வாழ்க்கை எழிலுடன் தான் அமையப் போகிறது.

Also read: பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு

Trending News