Veera Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், ராமச்சந்திரன் குடும்பத்தை தனித்தனியாக பிரித்து அனைவரது நிம்மதியும் கெடுக்க வேண்டும் என்று கண்மணி மறைமுகமாக பிளான் போட்டு வருகிறார். கண்மணியின் பிளானை தெரிந்து கொண்ட வீரா, அக்கா வாழ்க்கையை சரி செய்து கண்மணியை சந்தோஷமாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாறனின் மனைவியாகவும் ராமச்சந்திரனின் மருமகளாகவும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கார்த்திக் மீது பழியை போட்டு கார்த்திக்கை கடை பக்கம் வரவே விடக்கூடாது என தரம் குறைந்த துணியை மாற்றி வைத்து ராமச்சந்திரனிடம் கார்த்திக்கை கண்மணி மாட்டி விட்டார். இதனால் கோபப்பட்ட ராமச்சந்திரன் கடையில் இருக்கும் அத்தனை ஊழியர்கள் முன் கார்த்திக்கை அடித்து அவமானப்படுத்தி பேசிவிட்டார். உடனே கோவப்பட்ட கார்த்திக் வீட்டை விட்டு போகிறேன் என்று கிளம்பி விட்டார்.
ஆனால் வீரா, கார்த்திக்கை போகவிடாமல் தடுக்கும் விதமாக இப்பொழுது நீங்கள் வீட்டை விட்டு போனீங்க என்றால் உங்கள் மீது விழுந்த பழியை எப்படி சரி செய்வீங்க என்று நைசாக பேசி கார்த்திக் மனசை மாற்றி விட்டார். இருந்தாலும் இதற்கு பின்னணியில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது என்று புரிந்து கொண்ட மாறன், கடை டிரைவருக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை கேட்கிறார்.
அதற்கு அவர் நான் போகவில்லை புதுசாக வந்த டிரைவர் தான் போனார் என்று சொன்னதால் அந்த புது டிரைவரை மாறன் மடக்கி பிடித்து யார் இந்த மாதிரி செய்ய சொன்னார் என்ற உண்மையை எங்க அப்பாவிடம் வந்து சொல்ல வேண்டும் என்று கூட்டிட்டு வந்து விடுகிறார். இதற்கிடையில் வீராவுக்கு தெரியும் இது முழுக்க முழுக்க கண்மணியின் பிளான் தான் இருக்கிறது என்று.
அதனால் இந்த உண்மை ராமச்சந்திரனுக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்து விட்டால் அக்காவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் வீரா, தன் மீது பழி விழுந்தாலும் பரவாயில்லை என்று அந்த ஆட்களிடம் வீரா பெயரை சொல்லும் படி கேட்டுக்கொண்டார். இது தெரியாத மாறன் அந்த நபரை கடைக்கு கூட்டிட்டு வந்து ராமச்சந்திரன் முன் நிப்பாட்டுகிறார்.
ராமச்சந்திரன் அந்த நபரிடம் அடித்து கேட்ட பொழுது வீராவின் பேரை சொல்லிவிட்டார். இதை எதிர்பார்க்காத கண்மணி அதிர்ச்சியாகிவிட்டார். அத்துடன் மாறனும் இது என்ன புது குழப்பமாக இருக்கிறது என்று புரியாத புதிதாக குழப்பத்தில் நிற்கிறார். ஆக மொத்தத்தில் இந்த வீரா இருக்கும் வரை கண்மணியும் திருந்த வாய்ப்பில்லை மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பில்லை.. மாறனை மட்டுமில்லாமல் மொத்த குடும்பத்தையும் அக்கா தங்கச்சி இருவரும் சேர்ந்து முட்டாளாக்கி வருகிறார்கள்.