வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நொந்து நூடுல்ஸ் ஆன 5 வதந்திகள்.. செம போதையில் தலை கால் புரியாமல் நடந்துகொண்ட விஜய்

சினிமா பிரபலங்களை பற்றி கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகள் வருவது சாதாரணம் தான். ஆனால் வதந்திகளுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா என்ற அளவுக்கு பல கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டு உள்ளது. அவ்வாறு 5 சினிமா பிரபலங்களை பற்றி இணையத்தில் வெளியான வதந்திகளை பார்க்கலாம்.

ஜெயம் ரவி : ஒரு நாளிதழில் ஜெயம்ரவி ஸ்கிரீன் சீன் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதனால அந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை போயஸ் கார்டனில் 20 கோடி மதிப்புள்ள பங்களாவை ஜெயம் ரவி கொடுத்துள்ளதாக பொய்யான தகவல் வெளியானது.

அசின் : அசின் சூர்யாவுடன் இணைந்து கஜினி மற்றும் வேல் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகா உடன் ஏற்பட்ட பிரச்சினையால் அசின் அந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தார் என்றும் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் பூமிகா நடித்தார் என்ற வதந்தி அப்போது பரவியது.

பிரபு, குஷ்பூ : ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வந்தவர்கள் பிரபு, குஷ்பூ. இவர்கள் இருவரும் இணைந்து சின்னதம்பி, தர்மத்தின் தலைவன், வெற்றி விழா போன்ற பல படங்களில் நடித்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப் பில் இருந்ததாகவும் அதன் பின்னர் சிவாஜி இதற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் பல வருடங்களுக்கு முன்பு ஒரு கதை உலாவிக் கொண்டிருந்தது.

விஜய் : விஜய், வில்லு படத்தின் பிரஸ்மீட்டில் போது கோபமடைந்த சைலன்ஸ் என கத்தினார். அவருடன் அருகில் பிரபுதேவாவும் நின்று ஆச்சரியத்துடன் பார்த்தார். இதனால் விஜய் கொடுத்துவிட்டு தான் பிரஸ்மீட்டுக்கு வந்துள்ளார் அதனால்தான் உச்சகட்ட போதையில் தலைகால் புரியாமல் நடந்து கொண்டுள்ளார் என்று அப்போது பொய்யான தகவல் வெளியானது.

நயன்தாரா : தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உயர்ந்துள்ளார். இந்நிலையில் நயன்தாராவின் ராசியில் தமிழ்நாட்டின் சிஎம் ஆவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், திருமணம் செய்து கொண்டால் அந்த வாய்ப்பு போய்விடும் என்ற வதந்தி இணையத்தில் வெளியானது.

Trending News