Indian 2 Audio Launch: கடந்த ஜூன் 1ஆம் தேதி சனிக்கிழமை நேரு ஸ்டேடியத்தில் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. சங்கர் படங்களை போலவே இந்த விழாவும் மிக கோலாகலமாக, ஆடம்பரமாக இருந்தது. சிம்பு, நெல்சன், லோகேஷ், ஷங்கர், சுபாஸ்கரன் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
கமல் முதல் இரண்டு வரிசையில் உள்ள விஐபி மற்றும் எம் ஐ பி 2 விதமான டிக்கெட்டுகளையும் மொத்தமாய் வாங்கி விட்டாராம். அதனால் பெரிய புள்ளிகள் மட்டுமே முதலாவதாக அமர்ந்து பார்க்க முடிந்தது. சென்னையில் உள்ள பெரிய கல்லூரிகளுக்கு சென்று இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் பங்க்ஷன் நடக்கிறது என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
கல்லூரிகளுக்கு இது விடுமுறை நேரம் என்பதால் மாணவர்கள் கூட்டமும் அங்கே இல்லை மாறாக 80% ஆடிட்டோரியம் தான் நிரம்பியது. மாணவர்கள் இருந்திருந்தால் ஆரவாரம் மற்றும் கரகோஷங்கள் பட்டையை கிளப்பி இருக்கும். ஆனால் அது முற்றிலும் இந்த விழாவில் இல்லை. 5 மணிக்குள் விழா நடக்கும் இடத்திற்கு வந்து விட வேண்டும் என்று எல்லோருக்கும் கட்டளை போட்டிருந்தனர். ஆனால் அடிப்படை வசதிகள் அங்கே எதுவும் செய்யவில்லை. இரவு ஒரு மணி வரை இந்த விழா நடைபெற்று உள்ளது.
மக்கள் குடிதண்ணீர், சாப்பாடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். கமல் இந்த விழாவில் அரசியல் உள்நோக்கத்துடன் பேசியது தான் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளானது. நன்றாக போய்க்கொண்டிருந்த விழாவில், கமலால் வந்தது களங்கம்.
உதயநிதி இந்த படத்திற்கு நிறைய உதவி செய்திருக்கிறார் அவருக்காக நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன்.ஒரு தமிழன் பிரதமராக கூடாதா என்றெல்லாம் தேவையில்லாத விஷயங்களைபேசினார்.இது ஒரு புறம் இருக்க வழக்கம் போல் சிம்பு இரவு 10 மணிக்கு மிக தாமதமாக வந்தார்.
விஜய் போல் கிடைத்த ராஜா மரியாதை
விஜய் ஒரு விழாவிற்கு வரும்போது கிடைக்கும் ஆரவாரங்களும், வரவேற்புகளும் இந்த முறை சிம்புவுக்கு இருந்தது.சிம்பு வந்தவுடனே மொத்த மீடியாக்களும் அவரை சூழ்ந்து கொண்டது. சிம்பு லேட்டா வந்ததன் காரணத்தையும் கூறினார். தக் லைப் படப்பிடிப்பில் இருந்ததாகவும். அங்கே இருந்து வரதுக்கு தாமதமாகிவிட்டது என கூறி தவறை ஒப்புக்கொண்டார்.
- பாகிஸ்தான் தீவிரவாதியாக மாறிய கமல்
- நேரலையில் இந்தியன் 3 பற்றி அப்டேட் கொடுத்த கமல்
- நம்ப வைத்து துரோகம் செய்த கமல்