ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

Google-ல் அதிகம் தேடப்பட்ட இந்திய Celebrity-கள்.. யார் யார் தெரியுமா?

இந்திய அளவில் பிரபலாமாக இருக்கும் பல Celebrity-கள் பல நேரங்களில் உலகத்துக்கு தெரியாமல் போகிறார்கள். இந்திய பிரபலம் ஒருவரை உலகளவில் அதிகமாக தேடுவது என்றால் அது லேஸ் பட்ட காரியம் அல்ல.

அப்படி இந்த வருடம் Google-ல் தேடப்பட்ட இந்திய Celebrity-கள் யார் யார் என்று பார்க்கலாம்..

பவன் கல்யாண்: அடடே..இவரா.. இவர் பயங்கரமான ஆளாச்சே.. என்று தோன்றும். பவன் கல்யாண் என்று சொன்ன உடன் என்னவோ, அவர் திருப்பதி கோவிலை, குறுக்கு எலும்பு உடைய துடித்தது தான் ஞாபகம் வரும்.

ஆனால் இப்போது தான் இப்படி.. அவர் படங்கள் எல்லாம் மாஸ் ஆக இருக்கும். அரசியலில் ஒரு புறம் என்றால், மறுபுறம் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சந்திரபாபு தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், துணை முதல்வர் பதவியை வகித்து வருகிறார் பவன் கல்யாண்.

அடுத்ததாக ஹரிஹர வீர மல்லு என்ற படமும் இவர் நடிப்பில் வெளியாகவிருக்கிறது. மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார். இவர் Google-ல் அதிகம் தேடிய லிஸ்டில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

ஹீனா கான்: இந்த லிஸ்டில் அடுத்ததாக இருப்பது ஹீனா கான். இவர் google-ல் அதிகம் தேடிய லிஸ்டில் ஐந்தாவதாக இருக்கிறார். இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். இவர் சிகிச்சை நிலை பற்றி பலர் தேடியுள்ளனர்.

நிம்ரத் கவுர்: பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் பற்றி ஏராளமான மக்கள் தேடியுள்ளனர். இவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சில தகவல்கள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து, இவரை ஏராளாமானோர் பின்தொடர்ந்ததோடு, இவரை பற்றி தேடியும் உள்ளனர்.

அதுமட்டுமின்றி டைரி மில்க் சாக்லேட் விளம்பரத்தில் வந்ததன் மூலம் முதன்முதலில் இந்தியா முழுக்க பிரபலாமானார். மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனுக்கு விவாகரத்து என்ற செய்தி பரவியது..

அந்த விவாகரத்துக்கு காரணமே நிம்ரத் கவுர் தான். அபிஷேக் பச்சன் நிம்ரத் கவுர் உறவில் இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்த நிலையில், இவர் Google-ல் அதிகம் தேடப்பட்ட Celebrity-களில் 8-ஆவது இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் விவாகரத்து வெறும் வதந்தி தான் என்று அபிஷேக் பச்சன் தெளிவு படுத்தி இருந்தார்.

Trending News