வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இந்திய சினிமாவில் சிவாஜிக்கு இழைக்கப்பட்ட துரோகம்.. நடிகர் திலகத்துக்கு மறுக்கப்பட்ட தேசிய விருது

இந்திய சினிமா தொடங்கி நூறு வருடங்களுக்கு மேலாகியும் இன்று எத்தனையோ ஹீரோக்கள் இந்திய மொழிகளில் வந்து போயிருந்தாலும், நடிகர் சிவாஜி கணேன் நடிப்புக்கு இணையாக யாரையுமே சொல்லிவிட முடியாது. நடிப்புக்கு ஒரு அகராதியாகவே நடிகர் திலகம் அவர்கள் இன்றுவரை இருந்து வருகிறார்.

மன்னன் கதாபாத்திரம் தொடங்கி ஆண்டி, ஊனமுற்றவன், மதுவுக்கு அடிமையானவன், தெய்வம், காதலன், சகோதரன், மிருக குணம் உள்ளவன், கடமை தவறாத அதிகாரி என அத்தனை கதாபாத்திரங்களையும் கச்சிதமாக செய்தவர் நடிகர் சிவாஜி. இவருடைய கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன் போன்ற படங்களால் தான் சுதந்திரப் போராட்ட வீரர்களை கூட தெரிந்து கொண்டார்கள் அன்றைய சினிமா ரசிகர்கள்.

Also Read: சிவாஜியுடன் நடித்து எம்ஜிஆர் உடன் நடிக்காமல் போன 5 நடிகைகள்.. கடைசி வரை ஆசைப்பட்ட ஸ்ரீதேவி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் என்பது இந்திய சினிமாவோடு நின்றுவிடவில்லை உலகில் உள்ள பல நாடுகளினால் கௌரவிக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே. சர்வதேச அளவில் சிறந்த நடிகர் என்ற விருதை வாங்கிய முதல் இந்திய நடிகர்,  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே. மேலும் இவருக்கு செவாலியர் என்ற கௌரவப்பட்டமும் வழங்கப்பட்டது.

மேலும் எகிப்து அதிபர் ஒருமுறை இந்தியா வந்திருந்தபோது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் நடித்த சிவாஜியை சந்தித்தே ஆக வேண்டும் என்று அன்றைய பிரதமர் நேருவிடம் சொல்லி நடிகர் திலகத்தை நேரில் சந்தித்தார். மேலும் சிவாஜி அவர்கள் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு நாள் கௌரவ மேயராக நியமிக்கப்பட்டார். இது அத்தனையுமே சிவாஜியின் நடிப்புக்காக கிடைத்த கௌரவம்.

Also Read: முதல்முறையாக வெளிவந்த கலர் பயோபிக் திரைப்படம்.. எல்லாத்துக்கும் குருவான சிவாஜி

இப்படி தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பத்மபூஷன், பத்மஸ்ரீ, தாதாசாஹெப் பால்கே விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற நடிகர் சிவாஜி கணேசனுக்கு கடைசி வரை தேசிய விருது கொடுக்கப்படவில்லை. 1960 ஆம் ஆண்டு இவர் நடித்த பாகப்பிரிவினை திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கொடுக்கப்பட்டதே தவிர சிவாஜிக்கு சிறந்த நடிகர் என்று ஒரு முறை கூட தேசிய விருது கிடைக்கவில்லை.

அப்போதைய இந்திய சூப்பர் ஸ்டார்களான திலீப் குமார், உத்தம் குமார் போன்ற பிற மொழி நடிகர்கள் சிவாஜியின் திரைப்படங்களை ரீமேக் செய்யவே பயந்தனர். இதற்கு காரணம் அவரைப்போல் நடிக்கவே முடியாது என்பதால் தான். இந்த நடிகர்களின் படங்களை ரீமேக் செய்து நடித்த சிவாஜி, நடிப்பில் அவர்களையே தூக்கி சாப்பிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி தன்னுடைய சிறந்த நடிப்பினால் புகழ்பெற்ற சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கொடுக்காதது என்பது இந்திய சினிமா அவருக்கு செய்த துரோகமாகவே கருதப்படுகிறது.

Also Read: 17 வயதிலேயே நடிகர் திலகத்திற்கு கிடைத்த பெயர்.. சிவாஜியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

Trending News