நம் இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் ஆஸ்கார் விருது வரை சென்று உலகையே எட்டிப்பார்க்கும் அளவிற்கு மிஞ்சிய திரைப்படங்கள் அதிகம் உண்டு. ஆனால் ஒரு சில திரைப்படங்கள் விருது அளவு செல்லவில்லை என்றாலும் பலதரப்பட்ட ரசிகர்களிடம் ஒன்றாக அனைவருக்கும் பிடித்தமான திரைப்படமாக இயற்றப்பட்ட திரைப்படங்கள் நம் இந்திய சினிமாவில் அதிகம் உள்ளது. இந்த திரைப்படங்களின் மூலம் இந்திய சினிமாவின் தரம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஆயிரம் கோடி வரை சாதனை படைத்துள்ளது. அப்படிப்பட்ட 5 திரைப்படங்களை பற்றி தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
எந்திரன் 2.0: முதலில் தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கரின் 2.0 திரைப்படம் இடம்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படத்தின் பார்ட் 2 வாக எடுக்கப்பட்ட 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் ஓடி 800 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்தது. நாம் பயன்படுத்தும் செல்போனில் இருந்து வரும் அதிகப்படியான அலைக்காற்றால் பறவைகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்ற சமூக கருத்தை மையமாக வைத்து இயக்குனர் ஷங்கர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 கெட்டப்பில் உலக ரசிகர்களையே ஈர்த்திருப்பார்.
பாகுபலி,ஆர்.ஆர்.ஆர்: தமிழில் சங்கர் போலவே தெலுங்கில் பிரம்மாண்டமான இயக்குனர் என்ற பெயரை கொண்டவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி. இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட திரைப்படங்கள் உலக அளவில் 1000 கோடி வரை வசூல் செய்தது. இத்திரைப்படங்களில் மன்னர்கள் காலத்தில் நடைபெற்ற ஆட்சி, காதல், வீரம், போர் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து விண்டேஜ் கதைக்களத்தை தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தின் மூலமாக திரையில் பிரதிபலித்திருப்பார் ராஜமவுலி. இவரது பாகுபலி முதல் பாகம் திரைப்படத்திற்கு பின் இந்திய சினிமா உலக அளவில் முக்கியமான இடத்தை பிடித்தது என்று சொல்வது மிகையாகாது. .
கேஜிஎப்: கன்னட நடிகர் நடித்த கேஜிஎப், கே ஜி எஃப் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய சினிமாவை ஒரு படி மேலே கொண்டு சென்ற திரைப்படமாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே கன்னட சினிமாவில் எடுக்கப்படும் பல திரைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த திரைப்படங்களை கன்னடத்தில் டப் செய்து வெளியிடுவார்கள். கோலார் தங்க சுரங்கத்தின் வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து ஆக்சன் காட்சிகளும் யாஷின் அம்மா சென்டிமென்ட் உள்ளிட்டவை பிரம்மாண்டமாக கடைபிடிக்கப்பட்டு இருக்கும். மேலும் கே ஜி எஃப் 3 திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூம்: பாலிவுட்டில் பல திரைப்படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டாலும் இன்றளவும் இந்திய ரசிகர்களை ஈர்த்த திரைப்படங்களில் ஒன்றானது தான் தூம் சீரிஸ். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தூம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் பாகங்கள் அடுத்தடுத்து வெளியானது. அபிஷேக்பச்சன், கத்ரீனா கைப் ஐஸ்வர்யாராய், ஹிர்திக் ரோஷன், அமீர்கான், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் தூம் சீரிஸில் நடித்து பிரபலமானவர்கள். இயக்குனர் சஞ்சயின் இயக்கத்தில் தூம், தூம் 2 போன்ற திரைப்படங்களும், இயக்குனர் விஜய் கிருஷ்ணா ஆச்சர்யா, இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு தூம் 3 திரைப்படமும் வெளியானது. இம்மூன்று திரைப்படங்களும் உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ரா- ஒன்: 2011 ஆம் ஆண்டு, நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக வெளிவந்த ரா- ஒன் திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீங்கா இடம் பிடித்த திரைப்படம். இயக்குனர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஷாருக் கான்,கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தில் நாம் விளையாடும் கேமில் உள்ள கதாபாத்திரங்கள் நிஜவாழ்க்கையில் நம்முன் வந்தால் எப்படி இருக்கும், அது சாத்தியமானதா? இல்லையா? என்பதை விவரிக்கும் திரைப்படம்தான் ரா-ஒன் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. விஷால்-சேகர் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பாடல்கள் அதுமட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் மொழிபெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.