செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அரண்மனை போல வீடு கட்டிய இனியா.. ஆல்யா புது வீட்டின் புகைப்படங்கள் வைரல்

Alya Manasa: ஒருவருக்கு நேரம் காலம் கூடிவிட்டால் எல்லாமே நன்றாகவே நடக்கும். நம்மளை சுற்றியும் நல்லதாக நடக்கும் என்பதற்கு உதாரணமாக சீரியல் நடிகை ஆலியாவை சொல்லலாம். ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆலியாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் துவண்டு போயிருந்தார். அந்த நேரத்தில் விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்பு ராஜா ராணி சீரியலில் ஹீரோயினாக நடிப்பதற்கு.

புது வீட்டுக்கு மாமியார் பெயரை வைத்து அழகு பார்த்த ஆல்யா

alya manasa new house
alya manasa new house

கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நடிப்பில் குறை சொல்ல முடியாத அளவிற்கு ராஜா ராணியில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அத்துடன் அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவையும் கவர்ந்து காதலிக்க ஆரம்பித்தார்கள். பிறகு இவர்களுடைய திருமணம் பெற்றவர்கள் சம்மதத்துடன் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.

alya house
alya house

இதனைத் தொடர்ந்து ஒரு மகள் மற்றும் மகன் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும் ஆலியா விளம்பர மற்றும் நாடகங்களில் பிஸியாகி நடித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே மாதிரி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.

alya new house
alya new house

இப்படி இரண்டு பேருமே பிஸியாக இருப்பதால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு சஞ்சீவ் அம்மா முழுமையாக ஏற்றுக் கொண்டு சரிவர செய்து வருகிறார். இந்த சூழலில் அனைவரும் 1.5BHk வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இரண்டு பேரும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் போராடி தற்போது ஒரு அரண்மனை போல் கனவு இல்லத்தை கட்டி முடித்திருக்கிறார்கள்.

alya house warming
alya house warming

அந்த வீடு பார்ப்பதற்கு ரொம்பவே பிரம்மாண்டமாகவும் அரண்மனை போல் தனி வீட்டை கட்டி கிரகப்பிரவேசத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களுடைய வீட்டிற்கு சென்று பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் இந்த வீட்டிற்கு ஆலியா அவருடைய மாமியாரின் பெயரை வைத்திருக்கிறார். தற்போது இவர்களுடைய வீட்டின் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

Trending News