புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோபி கொடுத்த சப்போர்ட்டில் பாக்கியாவை அலட்சியப்படுத்திய இனியா.. வெறுத்து ஒதுக்கும் ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா செய்த அலப்பறை எல்லாம் ஓரளவுக்கு முடிந்த நிலையில் காலேஜுக்கு போகிறார். ஆனால் காலேஜுக்கு இந்த விஷயம் தெரிந்ததனால் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் டிசி கொடுப்பதற்கு முடிவெடுத்து விட்டார்கள். அதனால் காலேஜுக்கு அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து டிசியை வாங்கிட்டு போங்க என்று கல்லூரியின் முதல்வர் கூறி உள்ளார்.

அதன்படி இந்த விஷயத்தை எப்படி வீட்டில் சொல்வது என்று இனியா மற்றும் தோழிகளுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அப்பொழுது கோபி, ஆறுதல் சொல்வதற்காக இனியாவிற்கு ஃபோன் பண்ணுகிறார். எது நடந்தாலும் நடந்துட்டு போகட்டும், அதையே நெனச்சு கவலைப்படாத. இனி ஒவ்வொரு விஷயத்திலும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். படிப்பில் நல்ல கவனம் செலுத்து என்று அட்வைஸ் பண்ணுகிறார்.

பாக்கியாவிடம் உண்மையை மறைக்கும் இனியா

அப்பொழுது காலேஜில் ஏதாவது பிரச்சனையா என்று கோபி கேட்கிறார். அதற்கு இனியா, இந்த விஷயம் காலேஜுக்கு தெரிந்து போனதால் பெற்றோர்களை கூட்டிட்டு வர சொல்லி இருக்கிறார் என்று சொல்கிறார். உடனே ஒன்னும் பிரச்சினை இல்லை நான் வந்து நாளைக்கு உங்க காலேஜ்ல பேசுகிறேன். எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இனியாவிற்கு சப்போர்ட் பண்ணி ஆறுதல் படுத்துகிறார்.

பிறகு கல்லூரியில் இருந்து இனியா கிளம்பும் பொழுது, தாத்தா மற்றும் ஈஸ்வரி கூட்டிட்டு போவதற்காக வந்திருக்கிறார்கள். அப்பொழுது இனியாவிடம் பேசிக்கொண்டே வீட்டிற்கு ஆட்டோவில் கூட்டிட்டு வருகிறார்கள். இனி தொடர்ந்து நாங்கள் தான் காலேஜுக்கு கூட்டிட்டு வந்து விடுவோம். கூட்டிட்டு போவோம் என்று ஈஸ்வரி மற்றும் தாத்தா முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது. ஈஸ்வரி, எழிலிடம் உனக்கும் அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று நான் சொன்ன விஷயத்தை ஞாபகம் வைத்திருக்கிறாயா என்று கேட்கிறார். அதற்கு எழில் எதுவும் மறக்கவில்லை, கொஞ்சம் நான் செட்டில் ஆனதுக்கு அப்புறம் அதைப்பற்றி யோசிக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன் என்று சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி இதையெல்லாம் உங்க இஷ்டத்துக்கு தள்ளிப் போடக்கூடாது. காலம் காலத்துக்கு என்ன நடக்கணுமோ அது நடந்தால் தான் நல்லா இருக்கும் என்று எழிலுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். அந்த நேரத்தில் இனியா அமைதியாக இருப்பதை பாக்யா பார்த்துவிட்டு என்னாச்சு இனியா காலேஜ்ல ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அதற்கு இனியா அப்படி எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. இந்த விஷயம் காலேஜுக்கு தெரிந்து விட்டது அவ்வளவுதான் என்று சொல்கிறார்.

உடனே பாக்யா உங்களை கூப்பிட்டு எதுவும் கேட்கலையா என்று கேட்கிறார். அதற்கு இனியா யாரும் எங்களை கூப்பிட்டு பேசவில்லை. ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறுகிறார். ஆனால் பாக்யாவிற்கு தெரிகிறது இனியா ஏதோ மறைக்கிறாள் என்று. ஏற்கனவே பாக்கியாவிடம் பல விஷயங்களை மறைத்து தான் சிக்கல்களில் மாட்டிக்கொண்டார்.

அதே மாதிரி இப்பொழுது கோபி வந்து காலேஜில் பேசுகிறேன் என்று கொடுத்த சப்போர்ட்டின் படி காலேஜில் இருக்கும் சிக்கல்களை பாக்கியாவிடம் சொல்லாமல் இனியா மறைக்கிறார். ஆனால் மறுநாள் காலேஜில் விட வரும் பொழுது கல்லூரியின் முதல்வரை பாக்யா பார்த்து பேசுகிறார். அப்பொழுது இனியாவிற்கு டிசி வாங்கிட்டு போங்க என்று சொல்லி நிலையில் பாக்கியா அவர்களிடம் கெஞ்சுகிறார். பிறகு கல்லூரி முதல்வர், இனியாவின் அப்பா எங்கே என்று கேட்கும் பொழுது ஈஸ்வரி ஆவேசப்பட்டு அவளுக்கு அப்பா யாரும் இல்லை.

அவளுடைய அப்பா வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாரு. அதனால அவளுக்கு எல்லாமே நாங்க தான் என்று சொல்கிறார். இதை கேள்விப்பட்டதும் கோபி கோபத்துடன் வீட்டுக்கு வந்து உங்களுக்கு நான் பிள்ளை இல்லை என்று சொல்வதற்கு எல்லா உரிமை இருக்கிறது. ஆனால் இனியாவிற்கு நான் அப்பா இல்லை என்று சொல்ல உங்க யாருக்கும் உரிமை இல்லை என கோபப்படுகிறார். அந்த வகையில் இதுவரை கோபிக்கு சப்போர்ட்டாக இருந்த ஈஸ்வரி தற்போது மொத்தமாக வெறுத்து ஒதுக்கி விட்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News