புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீண்டும் பாக்கியாவை அவமானப்படுத்த போகும் திருந்தாத இனியா.. மகளைக் காப்பாற்ற ரிஸ்க் எடுக்கும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியா வீட்டிற்கு போய் சண்டை போட்டு இனியாவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூப்பிட்டார். ஆனால் இனியா, கோபிக்கு நோ சொல்லி நான் அம்மா கூடயே இருந்துக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இதனால் வருத்தத்துடன் திரும்பி போன கோபி, ராதிகாவிடம் போய் புலம்புகிறார்.

என்னை யாருமே என் வீட்டில் மதிக்கவே இல்லை, என் வீட்டிற்கு போனேன். நீ ஏன் இங்கே வந்தாய் வெளியில் போ என்று என்னை துரத்துகிறார்கள். என் மகள் இனியாவை என்னிடம் கூப்பிட்டேன். ஆனால் அவள் வரமாட்டேன் என்று சொல்லி என்னை கஷ்டப்படுத்தி விட்டால் என்று புலம்புகிறார். இதைக் கேட்டு ராதிகா எதுவும் சொல்லாத நிலையில் கோபி நீயும் என்னிடம் பேசாமல் ஏன் என்னை கஷ்டப்படுத்துகிறாய் என்று கேட்கிறார்.

கோபிக்கு போன் பண்ணியா இனியா

அதற்கு ராதிகா, ஓ நீங்க கஷ்டப்பட்டு புலம்பும் பொழுது நான் உங்களுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்கிறார். இத்தனை நாள் என்னிடம் பேசாமல் தான இருந்தீங்க. இப்ப மட்டும் வந்து என்ன பேசுறீங்க. உங்களுக்கு ஒரு தேவை என்றால் நான் வேணும், இல்லன்னா என்ன கண்டுக்க கூட மாட்டீங்க. எப்ப பாத்தாலும் உங்க குடும்பம், உங்க பிள்ளைகள் தான் உங்களுக்கு நினைப்பிருக்கிறது.

நமக்கான ஒரு குழந்தை கருவில் கலைந்து போய்விட்டது என்று கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா? நீங்க உங்க குடும்பத்தை நினைத்து கவலைப்பட்டால் நான் அதற்கு ஆறுதல் சொல்லிடனும் அப்படித்தானே என்று கோபியிடம் கேள்வி கேட்கிறார். அத்துடன் கடைசி முறை உங்கள் வீட்டிற்கு நீங்கள் போகும் பொழுது உங்க அம்மா என்ன சொன்னாங்க. இந்த வீட்டுக்கு நீ எந்த காரணத்தை கொண்டும் வரக்கூடாது என்று திட்டி தானே வெளியே அனுப்புனாங்க.

அப்புறம் எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு அங்க மறுபடியும் போய் நிக்கிறீங்க. உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லையா என்று கோபியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். வழக்கம் போல் இதை கேட்ட கோபி ஏன் எல்லோரும் என்னை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை என்று புலம்பி கொள்கிறார். இதனை எடுத்து இனியா காலேஜுக்கு போகிறார்.

ஆனால் அங்கே இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்த நிலையில் இனியா மற்றும் தோழிகளை கூப்பிட்டு கல்லூரியின் முதல்வர் திட்டுகிறார். திட்டுவதோடு மட்டுமில்லாமல் இந்த காலேஜில் நீங்க படிப்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள். அதனால் உங்களுக்கு டிசி கொடுக்க முடிவு பண்ணி விட்டோம். நாளைக்கு உங்களுடைய பெற்றோர்களை கூட்டிட்டு வந்து டிசியை வாங்கிட்டு போங்க என்று சொல்லிவிட்டார்.

இதனை எப்படி அம்மாவிடம் சொல்ல என்ற தயக்கத்தில் இனியா, கோபிக்கு போன் பண்ணுகிறார். கோபியிடம் விஷயத்தை சொன்ன நிலையில், கோபி இனியாவை சமாதானப்படுத்தி நான் வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆக மொத்தத்தில் மீண்டும் பாக்கியாவை அவமானப்படுத்தும் விதமாக, இந்த விஷயத்தை கோபிக்கு சொல்லி பிரச்சினையை இன்னும் பெரிசாக்க போகிறார்.

எப்படியாவது இனியாவின் கல்லூரி படிப்பை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கோபி ரிஸ்க் எடுத்து கல்லூரியின் முதல்வரிடம் போய் கெஞ்ச போகிறார். ஆனால் இது எதுவும் சரிப்பட்டு வராத நிலையில் இனியாவிற்கு டிசி கிடைக்கப் போகிறது. இதன் மூலம் மீண்டும் பாக்கியா அவமானப்பட்டு பல பிரச்சினைகளை சந்திக்கப் போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News