வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சும்மாவே விக்ரம் காலில் சலங்கை கட்டுன மாதிரி ஆடுவாரு.. இதுல இனியா தோஸ்த் வேற

Sun Tv Iniya Serial: சன் டிவியில் மதியம் ஒளிபரப்பாகி வருகின்ற இனியா சீரியலில் ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக சண்டை போட்டு இருந்த இனியா விக்ரம் போகப் போக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தார்கள். பிறகு மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு எதிர்பாராத ஒரு பிரச்சனை ஏற்பட்டதால் விக்ரம் தலையில் அடிபட்டுவிட்டது. அதனால் சமீபத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தும் மறந்து போய்விட்டது.

அத்துடன் லவ்வர் பாயாக இருந்த விக்ரம் ரக்கடு பாயாக மாறி விட்டார். இதனால் பழைய மாதிரி அடாவடித்தனத்தையும், பெண்களை அடிமையாக வைக்கும் கொடூர கேரக்டருக்கு மாறிவிட்டார். இதற்கு இடையில் இனியா பழைய மாதிரி விக்ரம் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் கொடுக்கும் அனைத்து டார்ச்சலையும் தாங்கிக் கொண்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது புதிதாக வக்கீல் சூர்யா என்டரி கொடுத்திருக்கிறார். இவரைப் பார்க்கும் பொழுது நேர்மையாகவும், அநியாயங்களை தட்டிக் கேட்கும் ஒரு ஸ்ட்ரிட்டான வக்கீல் மாதிரி தெரிகிறது. அந்த வகையில் விக்ரம் கேரக்டருக்கும் இவருக்கும் எட்டாத தூரமாக இருக்கிறது. அதனாலேயே ஒரு சில இடங்களில் இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது.

Also read: கோபியிடம் இருந்து பொண்டாட்டியை பிரித்த மாமியார்.. வயிற்றெரிச்சல் படும் ராதிகா

அதாவது விக்ரம் எதார்த்தமாக செய்யும் விஷயங்கள் அனைத்தும் சூர்யா பார்வைக்கு தவறாக ஜோடிக்கப்பட்டு வருகிறது. இதனால் விக்ரமிடம் நியாயத்திற்காக சண்டை போடுகிறார். ஏற்கனவே விக்ரம் காலில் சலங்கை கட்டி விட்ட மாதிரி ஓவரா ஆடுவாரு, இதுல புதுசாக வந்த வக்கீல் வேற. போதாக்கரைக்கு இவர் இனியாவின் நண்பராக வருகிறார்.

இந்த விஷயம் சூர்யாவிற்கு தெரிந்தால் இதை வைத்து இன்னும் இனியாவிற்கு அதிகமான குடைச்சலை கொடுப்பார். அத்துடன் வக்கீல் சூர்யாவிற்கும் தேவையில்லாத பிரச்சினைகளை கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்த நேரத்தில் அம்பியாக இருப்பார், எப்பொழுது அந்நியனாக மாறுவார் என்று யாராலும் கணிக்க முடியாது  அளவிற்கு விக்ரம் கேரக்டர் இருக்கிறது.

பாவம் இவர்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு இனியா தான் படாதபாடு படப் போகிறார். இதற்கிடையில் புதுசாக வந்த சூர்யா தான் விக்ரமின் தங்கச்சி காதலிக்கும் காதலனாக இருக்கப் போகிறார். அப்படி இருக்கும் பொழுது இவர்களுடைய காதல் எப்படி திருமணத்தில் போய் முடியப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: சர்க்கரை பொங்கலுக்கு வடகறியா.? முல்லையின் அக்கா மகனுக்கு ஜோடியான மீனா

Trending News