செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சுனிதாவுக்கு நடந்த அநியாயம், மஞ்சக்காட்டு மைனாவை வெளியேற்றும் பிக் பாஸ்.. எலிமினேஷனில் விஜய் டிவி வைத்த டுவிஸ்ட்

Bigg Boss 8 Tamil: இந்த வாரம் நாமினேஷனில் எட்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஃப்ரீ நாமினேஷன் டாஸ்க் பெண்கள் அணிக்கு கிடைத்ததால் பவித்ராவை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றி விட்டார்கள். இதில் வழக்கம் போல் டாப் 4 இடத்துக்கு சில போட்டியாளர்கள் வந்துவிட்டார்கள். அந்த வகையில் இவர்களை யாரும் அசைக்க முடியாது என்பதற்கு ஏற்ப மக்களிடம் அதிக ஓட்டுக்களை பெற்றிருக்கிறார்கள்.

அவர்களில் முத்துக்குமார், சௌந்தர்யா, தீபக், அருண். இவர்களுக்கு அடுத்ததாக டேஞ்சர் ஜோனில் இருப்பது தர்ஷா, ஜாக்லின், அன்சிதா. அதில் ஜாக்லின் தான் இப்பொழுது வரை, தப்போ ரைட்டோ ஏதோ பெண்கள் அணியை கொஞ்சம் தூக்கி விடும் விதமாக விளையாடி வருகிறார். அதனால் இந்த வாரம் ஜாக்குலின் வெளியாகிவிட்டால் சுவாரஸ்யம் மொத்தமாக குறைந்து விடும் என்பதால் விஜய் டிவி உள்ளே புகுந்து எலிமினேஷனில் ஒரு டுவிஸ்ட் வைத்து விட்டது.

அதாவது ஓட்டு கணிப்பின்படி ஜாக்லின் தான் கம்மியான ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார். ஆனால் இவருக்கு பதிலாக உள்ளே டிராமா பண்ணிக்கொண்டு எதுவும் தெரியாத குயின் போல முகத்தை வைத்துக்கொண்டு சத்யாவை ஒருதலைப் பட்சமாக ரூட்டு விட்டுக்கொண்டு மனசுல ஏதோ மஞ்சள் காட்டு மைனா போல உலாவி வரும் தர்ஷா தான் இந்த வாரம் பலியாடாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்.

அடுத்ததாக இந்த வாரம் பெஸ்ட் பர்பாமன்ஸ் பெண்கள் அணியில் இருந்து ஆனந்திக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அப்படி சொல்ற அளவுக்கு இந்த வாரம் ஆனந்தி எதிலுமே கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை. அதாவது பிசிகல் டாஸ்க் வச்சாங்க அதுலயும் ஒன்னும் விளையாடல, கிச்சன் டீம்லயும் அவங்க பெருசாக சொல்ற அளவுக்கு எதுலயும் இல்ல. ஏனென்றால் இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் தான் நடந்தது.

அப்படி நடந்த ஹோட்டல் டாஸ்க்கிலுமே அவங்க பெஸ்டாக பண்ணவில்லை ஏதோ வந்தாங்க கடமைக்கு பண்ணிட்டு போன மாதிரி தான் இருந்தது. இப்படி இருக்கும் பொழுது என்ன அர்த்தத்தில் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்று ஆனந்தியே தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் ஆனந்தியை விட சுனிதா ஒவ்வொரு விளையாட்டிலும் நின்னு போராடி ஜெயித்தார்.

டாஸ்க்ல நின்னு விளையாண்டு அடிப்பட்டு நூடில்ஸ் ஆனது சுனிதா தான். அந்த வகையில் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் சுனிதாவிற்கு தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சுனிதாவுக்கு கிடைக்கக்கூடாது என்று அங்கு இருக்கும் பெண்களில் சிலர் முடிவெடுத்து ஆனந்தியை தேர்வு செய்து சுனிதாவிற்கு மிகப்பெரிய அநியாயத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

Trending News