என்ன பெரிய டெய்லர் அக்கா?. ஜிம் அக்கா, டிவோஷனல் அக்கா கேள்வி பட்டு இருக்கீங்களா?

Tailor Akka funs: விஜய் சேதுபதியின் ரெக்க படத்தில், பிளாஷ்பேக் காட்சியில் அந்த சிறுவன் மாலா அக்கா ஐ லவ் யூ என்று சொல்வான். அக்கா, ஐ லவ் யூ என்று சொல்லும்போது அத்தனை பேருக்குமே சிரிப்பு வந்திருக்கும். ஆனால் இப்போது இணையவாசிகள் அதையே தான் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

அக்கா அழகா இருக்கீங்க, அக்கா உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, அக்கா இந்த பாட்டுக்கு ரிலீஸ் போடுங்க என அக்கா அக்கா என்று கூப்பிட்டு கடலை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் பிரியாணி மேன் மூலம் டெய்லர் அக்கா ஃபேமஸானது எல்லோருக்கும் தெரியும்.

தயாளு என்ற பெயரில் இருக்கும் இன்ஸ்டால் ஐடியில் வரும் பெண் பிளவுஸ்கள் அழகாக தைத்து போட்டுக்கொண்டு, அதற்கு ஏற்றது போல் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு ஃபிட்டிங் செக் பண்ணலாமா என்று வருவார்.

Tailor akka memes
Tailor akka memes

டெய்லர் அக்கா என்ற டீசன்டாக கூப்பிட்டாலும் அவரைப் பற்றி வெளியாகும் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் காதல் ரசம் நிறைந்ததாக தான் இருக்கும். டெய்லர் அக்கா மாதிரியே இன்ஸ்டாகிராமில் இன்னும் சில அக்காக்கள் பேமஸ் ஆக இருக்கிறார்கள்.

Tailor akka memes
Tailor akka memes

ஜிம் அக்கா, கோடிங் அக்கா, டிவோஷனல் அக்கா என அக்காக்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. இதில் ஜிம் அக்கா, தான் உடற்பயிற்சி கூடத்தில் வொர்க் அவுட் செய்வதை ரிலீஸ் ஆக போட்டு பாலவர்களை ஏற்றி கொண்டிருக்கிறார்.

Tailor akka memes
Tailor akka memes

கோயில் பக்கமே போகாத இளைஞர்களை சாந்து போட்டு, சந்தன போட்டு வைத்துக்கொண்டு சாமி பாட்டுக்கு ரிலீஸ் பண்ண வைத்து விட்டார் டிவோஷனல் அக்கா. மேலும் கோடிங் பற்றி இன்ஸ்ட்டாவில் கிளாஸ் எடுக்கும் பெண்ணுக்கு கோடிங் அக்கா என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

Tailor akka memes
Tailor akka memes
Tailor akka memes
Tailor akka memes

இவர்கள் அக்கா என்று கூப்பிடுவது எல்லாம் சரிதான், ஆனால் அக்காவை எப்படியெல்லாம் வர்ணிக்க கூடாதோ அப்படியெல்லாம் வர்ணிப்பது தான் இதில் சிக்கலாக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →