Intel: அமெரிக்கவின் சிப் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் தான் இன்டெல்(intel). என்னதான் தற்போது சாம்சங், டிஎஸ்எம்சி, எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பல சிப்கள் தயாரித்து வந்தாலும் எப்பொழுதுமே தனித்துவம் பெற்று பெஸ்டாக இருப்பது இன்டெல் நிறுவனம்தான்.
ஆனால் ஏஐ(AI) சிப்களுக்கான சந்தையில், இன்டெல் கொஞ்சம் பின் தங்கி இருப்பதால் இதனுடைய செயல்பாடுகளை நெறிப்படுத்தும் விதமாக 15% க்கு மேல் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
AI தொழில்நுட்பத்தால் ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த இன்டெல் நிறுவனம்
அதாவது இதுவரை இதனுடைய பங்குகள் 48% க்கு அதிகமாக குறைந்து இருக்கிறது. இந்த பெரும் சரிவை மீட்டெடுப்பதற்காக கிட்டத்தட்ட 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.
இப்படி செய்வதினால் இந்த ஆண்டில் இன்டெல் நிறுவனத்தின் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின்படி 83 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செலவை குறைக்கலாம் என்பதற்காக இப்படி ஒரு முயற்சி எடுக்கப் போகிறார்கள்.
இதனால் இஸ்ரேலில் உள்ள சிப் தயாரிப்பு ஆலையை விரிவு படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது இன்டெல் நிறுவனம். பல ஆண்டுகளாகவே இந்த இன்டெல் நிறுவனம் சிப்பை தயாரித்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இதற்கு போட்டியாக வந்த என்விடியா (NVIDIA) AI ஒரு படி முன்னாடி போய் நிற்கிறது.
இதனால் எதிர்பார்க்காத அளவுக்கு இன்டெல் பல சவால்களை சந்தித்து சரிவையும் பார்த்து வருகிறது. இப்படி பின்னடைவை சந்தித்த பிறகு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப துறையில் கவனம் செலுத்த உள்ளதாக இன்டெல் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனால் தான் பணியாளர்களை இன்டெல் நிறுவனம் குறைக்க முடிவெடுத்து இருக்கிறது.
எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செய்யும் AI தொழில்நுட்பம்
- AI படிக்க ஆசையா, எப்படி ஆரம்பிக்கிறது தெரிலையா?
- AI Technology: என்னதான் AI வந்தாலும் இதுல வாய்ப்பே இல்ல
- அபராதம் இல்லாமல் எஸ்கேப்பாக இளைஞரின் டெக்னாலஜி