Kalpana : இன்று காலை பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் பின்னனி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சித்ததாக வந்த செய்திதான். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ராகவேந்தர் மகள்தான் கல்பனா.
ஆரம்பத்தில் படங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி இருக்கிறார். இந்நிலையில் மிகுந்த மன அழுத்தத்தில் கல்பனா இருந்ததாகவும் அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டதாக கூறப்பட்டது.
மேலும் அக்கம் பக்கத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் செய்தி வந்தது. கல்பனாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த சூழலில் அவரது மகள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
பாடகி கல்பனாவின் மகள் கொடுத்த பேட்டி
அதாவது கல்பனா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனை இல்லை என்று கூறியிருக்கிறார். மருத்துவரின் பரிந்துரைப்படி மன அழுத்தத்தில் இருந்ததால் தூக்க மாத்திரைகள் எடுத்து வருகிறார்.
அந்த மாத்திரை ஓவர் டோஸ் இருந்ததால் மயக்கம் அடைந்து இருக்கிறார். மேலும் மருத்துவமனைக்கு வந்தவுடன் வெண்டிலேஷன் கொடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது.
இப்போது அம்மா நலமுடன் இருக்கிறார் என்று கல்பனாவின் மகள் கூறியிருக்கிறார். மேலும் மருத்துவமனை தரப்பிலும் அவர் நலமாக இருப்பதாகவும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்டார் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.