செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

Gpay, PhonePe பயன்படுத்துபவரா நீங்கள்.? UPI பண பரிவர்த்தனையின் புதிய 5 விதிமுறைகள்

5 New Terms Of UPI Transactions: எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் UPI பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. அதன்படி தற்போது ஜனவரி 1ம் தேதியிலிருந்து UPI பண பரிவர்த்தனையின் புதிய 5 விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

உபயோகப்படுத்தப்படாத UPI: அதாவது ஓராண்டுக்கும் மேல் UPI ஐ டி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்றால் அது செயல் இழக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பண மோசடி தவிர்க்கப்படும்.

1லிருந்து 5 லட்சமாக உயர்வு: இதுவரை UPI பண பரிவர்த்தனையின் உச்சகட்ட வரம்பு ஒரு லட்சம் ஆகத்தான் இருந்தது. ஆனால் இந்த புத்தாண்டில் இருந்து இது 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு பணம் செலுத்துவது சுலபமாகும்.

Also read: வெளிநாட்டு பொருட்களை வாங்கினால் இனி சோலி முடிந்தது.. அதிர்வலையை ஏற்படுத்திய 20% TCS, தல சுத்துது

ஆட்டோ பேமெண்ட்: மியூச்சுவல் பண்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்டவைகளின் தவணைகளுக்கு ஆட்டோ பேமெண்ட் வரம்பு ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பண பரிவர்த்தனைக்கு எந்த ஒரு Authentication தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 மணி நேர வரம்பு: அதாவது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது அதற்கான நேர வரம்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஒருவருக்கு 2000 ரூபாயை அனுப்ப வேண்டும் என்றால் பணத்தை பெறுபவர்கள் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு இருக்கிறது.

பண பரிமாற்றத்திற்கு கூடுதல் கட்டணம்: சிறு வியாபாரம் உள்ளிட்ட பிசினஸ் பேமெண்ட்களுக்கு 1.1 சதவீத பரிமாற்ற கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது ப்ரீபெய்ட் பேமெண்ட் மூலம் 2000 மேல் பண பரிவர்த்தனை செய்தால் இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

இது தவிர UPI ஏடிஎம் வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் QR code ஸ்கேன் செய்து பணம் எடுக்க முடியும். இப்படியாக புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது.

Also read: கிரிக்கெட்டில் இதுவரை இந்தியாவின் 6 டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்கள்.. வக்கார் யூனிசின் கேரியரில் ஜடேஜா வைத்த கரும்புள்ளி

- Advertisement -spot_img

Trending News