வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

முத்தமழை பொழிந்த ராஜா ராணி 2.. வரவர ரொம்ப ஓவரா போறீங்க!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் மனைவியின் கனவை தூக்கி சுமந்து கொண்டு, அதை நிறைவேற்றத் துடிக்கும் கணவன் சரவணன் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டான். ஏனென்றால் சரவணனின் அம்மா சிவகாமியின் சம்மதத்துடன் சந்தியாவின் கனவை நிறைவேற்ற நினைத்ததால், மருமகள் போலீஸ் அதிகாரியாக மாற விரும்புகிறார் என்ற விஷயத்தை தெரிந்த பின்பு சிவகாமி இதற்கு சுத்தமாக ஒத்துக்கொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி தன்னுடைய மருமகன் சந்தியாவிடம் நாசுக்காக பேசி முதலில் இந்த குடும்பத்திற்கு குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு அதன் பிறகு உன்னுடைய கனவை நிறைவேற்ற கிளம்பு என சிவகாமி சந்தியாவிடம் கூறுகிறாள். இதன்பிறகு சந்தியாவும் மாமியாரின் இஷ்டப்படி குடும்பத்திற்கு நல்ல மருமகளாக இருக்க வேண்டும் என நினைத்து தன்னுடைய மனதில் இருக்கும் போலீஸ் ஆக வேண்டும் என்ற சிறு வயதுக் கனவை புதைத்து வைத்துவிட்டு தலையில் மல்லிகை பூ சூடிக்கொண்டு சரவணனிடம் நெருங்குகிறாள்.

இருப்பினும் இது எல்லாம் நடிப்பு என்று சரவணன் கண்டுபிடிக்கிறான். ஆனால் அதையும் சமாளித்து, சந்தியா தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று விடாப்பிடியாக சரவணன் இறுக்கி அணைத்து முத்தமிடுகிறாள். ஆனால் சரவணனுக்கு இதில் இஷ்டமில்லை. அத்துடன் தன்னுடைய அம்மாதான் சந்தியாவிடம் ஏதோ பேசி மனசை மாற்றி இருக்கிறார் என்பதை சரவணன்உணர்ந்தது அதையும் கேட்கிறான்.

ஆனால் தன்னுடைய மாமியாரை மாட்டிக் கொடுக்காத சந்தியா, நான் இந்த வீட்டிற்கு குழந்தை பெற்றுத் தர விரும்புகிறேன் என மீண்டும் மீண்டும் பேசி சமாளிக்கிறார். அதுமட்டுமின்றி சிவகாமி சந்தியாவின் பெட்ரூமில் இருந்த சந்தியாவின் அம்மா அப்பா போட்டோஸ்வை எடுத்து சென்றுவிடுகிறாள்.

ஏனென்றால் சந்தியா மட்டுமல்லாமல் அவளுடைய அம்மா அப்பாவிற்கும் சந்தியாவை போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததால் இந்த போட்டோ இருந்தால்தான் அடிக்கடி இவர்களுக்கு நியாபகம் வரும் என்பதற்காக சிவகாமி தந்திரத்துடன் செயல்படுகிறாள்.

மேலும் சின்ன விசயத்தையும் சந்தியாவை குத்தி பேசும் மாமியார், தற்போது குடும்ப பொறுப்பை அனைத்தையும் எடுத்து சந்தியாவிடம் கொடுத்து அவளுடைய கனவை குழி தோண்டி புதைக்க நினைக்கிறார். இருப்பினும் சரவணன் இதற்கு இடம் கொடுக்காமல் வீட்டில் இருப்பவர்களை எதிர்த்து சந்தியாவை ஐபிஎஸ் அதிகாரியாக மாற்ற இனி வரும் நாட்களில் அதிரடி முடிவை எடுக்கப் போகிறான்.

Trending News