வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பொட்டியை கட்டிய IPS சந்தியா.. வேடிக்கை பார்த்துக் கொண்டே நிற்கும் சரவணன்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தன்னுடைய ஐபிஎஸ் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு மாமியார் சொன்னபடி நல்ல மருமகளாக சந்தியா முயற்சிக்கிறாள். இருப்பினும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொள்ளமுடியாமல் சந்தியா படும்பாடு சரவணனுக்கு தெளிவாக புரிகிறது.

இதனால் சந்தியா போலீஸ் ஆக வேண்டும் என்று படித்துக்கொண்டிருந்த புத்தகத்தையும், அம்மா அப்பாவின் புகைப்படத்தையும் பெட்டியில் போட்டு மூட்டை கட்டிக் கொண்டு, அதை எடுத்து ஸ்டோர் ரூமில் வைக்க கிளம்புகிறாள்.

இதை பார்த்துக்கொண்டிருந்த சரவணன், சந்தியாவின் இந்த மாற்றத்திற்கு நிச்சயம் அம்மாதான் காரணம் என்பதை புரிந்து கொள்கிறான். இனிமேல் சந்தியாவிடம் பேசி புரிய வைப்பதை விட்டு விட்டு, அம்மாவை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை மட்டும் யோசிக்க வேண்டும் என சரவணன் தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறான்.

இவ்வாறு சந்தியா, தன்னுடைய போலீஸ் கனவை மறக்க நினைத்தாலும், அர்ச்சனா செய்யும் தில்லுமுல்லு சந்தியாவின் போலீஸ் மூளையை அவ்வபோது தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் அர்ச்சனா தம்முடைய மாமனார் உடைய ஏடிஎம் கார்டை அவருக்குத் தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டு, அவரிடம் இருக்கும் பணத்தை எப்படி எடுப்பது என யோசிக்கிறாள்.

அர்ச்சனாவின் திருட்டு முழியை பார்த்த சந்தியா, அர்ச்சனா ஏதோ தப்பு செய்யப் போகிறாய் என அவளிடமே கேட்கிறாள். இருப்பினும் அச்சனா இதற்கு பிடிகொடுக்காமல் எஸ்கேப் ஆகிறார். இவ்வாறு இனி வரும் நாட்களில் சந்தியா, மாமியாரின் பேச்சை கேட்க போகிறாளா அல்லது கணவனின் முழு ஒத்துழைப்புடன் போலீஸ் ஆக முடிவெடுக்கப் போகிறாளா என பொறுத்திருந்து பார்ப்போம்.

அத்துடன் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா மானசா, சில நாட்களுக்கு ஓய்வெடுக்க செல்வதால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை கூடிய விரைவில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். எனவே அவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News