வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சினிமால மட்டும் அந்த தொழில் இல்ல, உடல் தேவைக்காக குடும்ப பெண்களும் இத செய்றாங்க.. சர்ச்சையை கிளப்பிய இரவின் நிழல் நடிகை

பெரும்பாலும் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பிரச்சனை சினிமாவில் தான் தலை தூக்கி இருக்கிறது என பலர் பேசி கேட்டிருக்கிறோம். ஏனென்றால் பட வாய்ப்புக்காக இயக்குனர், தயாரிப்பாளர் என பலரும் நடிகையை அட்ஜஸ்மென்ட் செய்ய கேட்டுள்ளார்கள் என பல பிரபலங்கள் பேட்டி கொடுத்துள்ளனர்.

ஆனால் இந்த பிரச்சனை சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் குடும்பப் பெண்களும் இது போன்ற பிரச்சனையை அனுபவித்து வருவதாக இரவின் நிழல் நடிகை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் சிங்கிள் சாட்டில் வெளியான திரைப்படம் இரவின் நிழல்.

Also Read : 7 வயதில் கதாநாயகி, 17 வயதில் நான்காவது மனைவி.. நம்பிக்கை துரோகத்தால் திசைமாறிய வாழ்க்கை!

இந்தப் படத்தில் மேலாடை இன்றி நடித்த ரேகா நாயர் பெண்களுக்கு எதிரான விஷயத்தில் துணிச்சலாக குரல் கொடுக்கக் கூடியவர். மேலும் இரவின் நிழல் படம் வெளியான போது பயில்வான் ரங்கநாதன் இவரை தவறாக பேசியதால் கடற்கரையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில் பிரபல சேனலில் பேட்டி கொடுத்த ரேகா நாயர், அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை சினிமாவில் மட்டும் தான் இருக்கிறது என்பதை உடைக்க நான் ரொம்ப பாடுபட்டு வருவதாக கூறியுள்ளார். அதாவது சாதாரணமாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பேப்பர் காரன், பால்காரன், பூக்காரன் ஆகியோரால் கூட இந்த பிரச்சனை இருக்க தான் செய்கிறது.

Also Read : முழுசா மூடி நடிச்ச படங்களை பத்தி யாரும் பேசல.. ரேகா நாயர் ஆவேசம்

இதுபோன்ற செய்பவர்களை பெண்கள் பார்வையாலே திட்டும் திறன் அவர்களுக்கு உள்ளது. ஆனால் இதில் பல பெண்கள் இதை செய்வதில்லை. பெண்களைப் பொறுத்தவரையில் சின்ன நிழல் கிடைத்தால் கூட அதில் சாய்ந்து கொள்ளும் நிலை பலருக்கு உள்ளது.

இதற்கு பொருளாதார தேவை, இளமை தேடல், காதல் தோல்வி அல்லது உடல் தேவைக்காக எதிரில் இருப்பவர் எப்படிப்பட்டவர் என்று கூட தெரியாமல் பெண்கள் சாய்ந்து விடுகிறார்கள். இதை மாற்ற வேண்டும் என்றால் பெண்கள் நினைத்தால் மட்டுமே முடியும் என ரேகா நாயர் கூறியுள்ளார்.

Also Read : ஆர்வக்கோளாறால் பறிபோன வாய்ப்பு.. சொதப்பலில் முடிந்த ரேகா நாயர் போட்ட பிளான்

Trending News