YouTuber Irfan : நேற்றைய தினம் ரமலானை முன்னிட்டு இர்ஃபான் போட்ட வீடியோ சர்ச்சையானது. தெருவோரங்களில் கஷ்டப்படுபவர்களுக்கு உடை மற்றும் பணம் ஆகியவற்றை தனது மனைவியுடன் கொடுத்து வந்தார்.
அப்போது காரில் அமர்ந்தபடியே பொருட்களை கொடுத்த நிலையில் சிலர் முந்தி அடித்துக்கொண்டு வாங்கினர். இதற்கு இர்ஃபான் அந்த நேரத்தில் நடந்து கொண்ட விதம் மற்றும் கமெண்ட் செய்தவை ரசிகர்களை எரிச்சல் அடைய செய்வது.
இதனால் இர்ஃபானை வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். விஜே பார்வதியும் தனது கண்டனத்தை இர்ஃபானுக்கு தெரிவித்திருந்தார். இன்றைய தினம் ஈது பெருநாள் கொண்டாடிய இர்ஃபான் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சர்ச்சைக்குப் பின் இர்ஃபான் கொடுத்த விளக்கம்
அதன் இறுதியில் நேற்று நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். நானும் கஷ்டப்படுற இடத்திலிருந்து தான் இங்க வந்திருக்கேன். எதுவுமே முன்கூட்டியே திட்டமிடுதல் உடன் நான் செல்லவில்லை.
அந்த நேரத்தில் யாரும் இல்லாததால் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சென்றேன். என் மனைவி ஹர்ட் ஆனதால் என்னால் அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை.
இனிமேல் இதுபோன்ற நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று இர்ஃபான் கூறி இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே ஏதாவது ஒரு சர்ச்சையில் இர்ஃபான் மாட்டி வருவதும் அது இணையத்தில் பேசு பொருளாக மாறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.