Irugapatru Preview Show Twitter Review: யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தான் இறுகப்பற்று. மூன்று தம்பதிகளுக்கு இடையே நடக்கும் உளவியல் பிரச்சனை பற்றிய கதை அம்சத்துடன் உருவாகி இருக்கும் இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்தது.

அது நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இப்போது ப்ரிவ்யூ ஷோ விமர்சனமும் ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் 8 வருட போராட்டத்திற்கு பிறகு அசத்தலான கதையுடன் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

Also read: 8 வருஷம் சினிமாவையே வெறுக்க வைத்த வடிவேலு.. மேடையிலேயே கண்ணீர் விட்ட இயக்குனர்
அது மட்டுமல்லாமல் விக்ரம் பிரபுவுக்கும் இப்படம் சிறந்த கம்பேக்காக இருக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு எதார்த்தமாக இருப்பதாக சினிமா விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். திருமணமானவர்களுக்கு இடையே இருக்கும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை சொல்லி இருக்கும் விதமும் சிறப்பு.

அதேபோன்று அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையை கச்சிதமாக செய்து இருக்கின்றனர். அதனாலேயே இப்படம் ஃபீல் குட் உணர்வை கொடுக்கிறது. அந்த வகையில் 96 படத்திற்கு பிறகு மற்றுமொரு மனதை வருடும் கதையாக இறுகப்பற்று இருப்பதாக கமெண்ட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.

Also read: இந்த வாரம் ரிலீசாக போகும் 6 படங்கள்.. விஜய் ஆண்டனி உடன் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் திரிஷா
மேலும் எமோஷனல் காட்சிகளும் இரண்டாம் பாதியும் கதையோடு ஒன்ற வைத்து விடுகிறது. அதற்கேற்றார் போல் சிங்கிள் ஷாட்டில் விதார்த் நடித்திருந்த காட்சியும், பேங்க் லோன் சீன் என அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது. அதற்கு பின்னணி இசையும் நன்றாக கை கொடுத்திருக்கிறது.

ஆக மொத்தம் இப்போது சர்வ சாதாரணமாகியுள்ள விவாகரத்து, பிரேக் அப் போன்ற கலாச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. அந்த வகையில் இறுகப்பற்று திருமணமானவர்கள், அந்த பந்தத்தில் இணைய போகிறவர்கள், சிங்கிள் என அனைவருக்குமான படமாக இருக்கிறது.
Also read: சண்டை போட காரணம் வேணாம் கணவன் மனைவியா இருந்தாலே போதும்.. கவனம் ஈர்க்கும் இறுகப்பற்று ட்ரெய்லர்