Is cell phone the cause of petrol station fire: சில விஷயங்கள் சரியோ தவரோ யாராவது ஒன்று சொல்லிவிட்டால் அதை நம் மூளை உடனே ஏற்றுக் கொள்கிறது. இதனால் அதில் இருக்கும் உண்மை என்கிற விஷயத்தை தெரிந்து கொள்ளாமலேயே போய்விடுகிறோம். அப்படித்தான் பெட்ரோல் பங்கில் செல்போனை பயன்படுத்தினால் உடனே அந்த இடம் தீப்பிடித்து விடும் என்ற விஷயத்தை பரப்பி விட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல் செல்போன் பேசிக்கொண்டு பெட்ரோல் பங்குக்கு வரக்கூடாது. அத்துடன் செல்போனை பயன்படுத்தவும் கூடாது, இன்னும் சொல்லப் போனால் செல்போன் சுவிட்ச் ஆஃப் பண்ணனும் என்ற சில விதிமுறைகள் எல்லாம் போடப்பட்டிருந்தது. அதை நாமும் நம்பி பெட்ரோல் பங்கில் செல்போன் பயன்படுத்துவது தவறு என்று நினைத்து பயன்படுத்தாமலே வந்தோம்.
தீ விபத்துக்கும் செல்போனுக்கும் சம்பந்தமில்லை
ஆனால் செல்போன் பயன்படுத்தினால் தீ விபத்து ஏற்படும் என்று சொன்னவர்கள் தான் டீசல் பெட்ரோல் போட்ட பின்பு பணத்தை Gpay மூலம் அனுப்பலாம் என்பதையும் நடைமுறைப்படுத்தினார்கள். இதனால் பெட்ரோல் பங்குக்கு போனவர்கள் அனைவரும் போனை எடுத்து இன்டர்நெட் மூலமா பணத்தை அனுப்பி தான் ஆக வேண்டும். அப்படி என்றால் அந்த இடத்தில் போன் பயன்படுத்தும் பொழுது தீ விபத்து ஏற்படாதா?
அப்போ இத்தனை நாளாக சொல்லிட்டு வந்த எல்லாமே கட்டுக்கதை தானா? கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம் அறிவியல் பூர்வமாக சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அதாவது ஆராய்ச்சியின் படி செல்போன் உபயோகத்திற்கும் பெட்ரோல் பங்குகளில் தீ விபத்து ஏற்படுவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
அதாவது பெட்ரோல் போடும் போது வாகனங்களில் இருக்கும் இன்ஜின் பக்கத்தில் ஏதாவது பிரச்சனைகள் மற்றும் உடனே தீப்பற்ற கூடிய ஸ்பார்க் எரிபொருள்களாகவும் இருக்கலாம். இதன் மூலமாகத்தான் உடனே தீப்பற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் இருந்து வரக்கூடிய எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் மூலமாக தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை.