வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஏஆர் ரகுமான் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா.? உருளும் அசுரன் தலை

Dhanush : எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் தனுஷ் பெயர் அடிபட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் தான் ஏஆர் ரகுமான், சாய்ரா பானு விவாகரத்து விவகாரத்திலும் தனுஷை நெட்டிசன்கள் இழுத்து விட்டிருக்கின்றனர். அதாவது சமீபத்தில் தான் நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனை பெரிசாக பேசப்பட்டது.

தனுஷ் சரியான நேரம் பார்த்து தன்னை பழிவாங்கி விட்டதாக நயன்தாரா விட்ட அறிக்கை பூதாகரமாக வெடித்தது. ஆனாலும் இந்த விவாகரத்தில் பெரும்பாலானோர் தனுசுக்கு ஆதரவாக தான் பேசி வந்தனர். இந்த சூழலில் சமீபத்தில் ஏஆர் ரகுமானின் மனைவி சாய்ரா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக பத்திரிக்கையில் கூறியிருந்தார்.

மேலும் ஏஆர் ரகுமான் தனது எக்ஸ் தளத்தில் அவரது விவாகரத்தை உறுதி செய்யும் படியாக பதிவு போட்டிருந்தார். இதற்கும் தனுஷுக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் யோசிக்கக்கூடும். அதாவது ஏஆர் ரகுமான் கடைசியாக தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்திற்கு தான் இசையமைத்தார்.

ஏஆர் ரகுமான் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா.?

ஏற்கனவே ஜிவி பிரகாஷ் விவாகரத்து செய்தி அறிவித்த போதும் இதே போல் தான் தனுஷின் படத்துக்கு கடைசியாக இசை அமைத்தார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மயக்கம் என்ன படத்தின் இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மூவருமே விவாகரத்து பெற்றதாகவும் சர்ச்சை கிளம்பியது.

அதோடு சமீபத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து அறிவித்த போதும் தனுஷின் பெயர் அடிபட்டது. தனுஷ் மற்றும் ஆர்த்தி சண்டையிடும்படியான வீடியோ அப்போது இணையத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். அதுமட்டுமல்லாமல் அமலா பால் போன்ற நடிகைகளின் விவாகரத்திலும் தனுஷ் தான் காரணம் என பேசப்பட்டது.

இவ்வாறு கோலிவுட்டில் பிரபலங்களின் விவாகரத்து சர்ச்சையில் அசுரனின் தலை உருளுவது வழக்கமாக இருக்கிறது. எல்லா பிரச்சனைகளிலும் தனுஷ் பெயர் ஈடுபட்டு வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News