வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கழுவி ஊற்றியதைப் பார்த்து கொந்தளித்த ரஜினியின் வாரிசு.. சிங்கப்பெண் ஸ்கெட்சில் சிக்காமல் பல் பிடித்துப் பார்த்த ஹீரோ

Super Star Rajini’s daughter: 73 வயதிலும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் இரண்டு வாரிசுகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் முன்னணி இயக்குனர்களாக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரஜினியின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் போனது.

இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்ததோடு சூப்பர் ஸ்டார் ரஜினியும் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் கிரிக்கெட் விளையாட்டுடன் மத நல்லிணக்கத்தை பேசிய படமாக அமைந்தாலும் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது.

‘படம் ரொம்ப மொக்கையா இருந்துச்சு’ என சோசியல் மீடியாவில் லால் சலாம் படத்தை கழுவி ஊற்றியதை பார்த்ததும் கொந்தளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட தயாராகிவிட்டார். எப்படியும் டாப் இயக்குனராகி விட வேண்டும் என்று சிங்கப்பெண் போல் போராடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய அடுத்த படத்தின் கதையை நடிகர் சித்தார்த்திடம் சொல்லி இருக்கிறார்.

Also Read: முதல்முறையாக 50 கோடி லாபத்தை சுருட்டிய 3 படங்கள்.. ரஜினிக்கு முன் வசூல் மன்னனாக ஜெயித்த விஜய்

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் ஹீரோ சித்தார்த்தா?

சித்தார்த்திற்கும் அந்த கதை பிடித்து போனது. ஆனால் அவர் கதையை ஒப்புக்கொள்ள அவருக்கேற்றார் போல் திரைகதையை மாற்றி அமைக்கும் படி கேட்டிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய கதையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். சித்தார்த் நேரடியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன கதை பிடிக்கவில்லை என சொல்லாமல், இலைமறை காயாக அதில் சில மாற்றத்தை கேட்டிருப்பது சிங்கப்பெண் ஸ்கெட்சில் சிக்காமல் சிங்கத்தோட பல்லை பிடிச்சு மட்டும் பதம் பார்ப்பதற்கு சமம்.

கடந்த ஆண்டு நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ படம் அவருக்கு பல வருடம் கழித்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் சித்தார்த் நடிப்பாரா! என்பது விரைவில் வெளியாக இருக்கும் அதிகாரப்பூர் அறிவிப்பின் மூலம் தெரிந்து விடும்.

Also Read: பிளான் பண்ணாம களத்தில் இறங்கி தோற்றுப் போன ரஜினி படம்.. வெற்றி இயக்குனரையே சாய்த்த நடிகையின் ராசி

Trending News