வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இளையராஜா இப்படி ஒரு மனுசனா.? மொத்த வாழ்க்கையும் புட்டு புட்டு வைத்த ஏ ஆர் ரகுமான்

A R Rahman-Illaiyaraja: இசையால் மக்களை தன் வசம் இழுத்த பிரபலம் தான் ஏஆர் ரகுமான். தன்னுடைய புது முயற்சியால் இவர் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் வெற்றி கண்டிருக்கின்றன. இந்நிலையில் இவர் பார்த்து, மெய்சிலிர்த்து போன பிரபலம் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

படத்தில் இளையராஜாவின் பாடல்கள் இடம் பெறுகிறதா என்று கேட்டுவிட்டு தான், விநியோகிஸ்தர்கள் படம் வாங்க முன் வருவார்களாம். அப்படி இவர் பாடலுக்கென முக்கியத்துவம் கொடுத்த காலம் அது. அவ்வாறு அன்னக்கிளி என்னும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன் பயணத்தை ஆரம்பித்தவர்.

Also Read: அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை .. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

அதைத்தொடர்ந்து பல மொழிகளிலும் இவரின் பாடல்கள் மூலம் பட்டைய கிளப்பனார். மேலும் நாட்டுப்புற மற்றும் கர்நாடக இசை போன்ற அனைத்திலும் நுணுக்கங்களை அறிந்து இவர் அமைத்த பாடல்கள் வெற்றி கண்டிருக்கின்றன. அவ்வாறுதான் மக்களால் இசைஞானி என அழைக்கப்பட்டார்.

இது ஒரு புறம் இருக்க, தற்பொழுது உலகம் எங்கும் தன் இசையின் மூலம் பயணித்து வரும் ஏ ஆர் ரகுமான், இளையராஜா குறித்த தகவலை புட்டு புட்டு வைத்து வியந்து வருகிறார். ஒரு இசைக்கலைஞனாய் கிசு கிசுக்கப்பட கூடிய விஷயங்களை எல்லாம் நான் இவரிடம் பார்த்ததில்லை என கூறினார்.

Also Read: விவேக், வடிவேலுவின் இடத்தை நிரப்பிய பிரம்மானந்தம்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 படங்கள்

அவ்வாறு தண்ணி, புகை போன்ற எந்த பழக்கங்களும் இல்லாத எளிமையான சாமியாரை போலவே இவர் இருந்து தன் இசைக்கு உயிர் கொடுத்து வந்தார். இவரின் இத்தகைய தன்மை தான் இவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது எனவும், அதை தான் முன் உதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்.

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து, படி படியாய் முன்னேறிய இவர், 75 கால அனுபவங்களைக் கொண்டு இன்றும் இளம் தலைமுறையினர்களுக்கு போட்டியாய் இசையமைத்து வருகிறார் என்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது போன்ற காரணங்களால் தான் இன்றும் இவர் பலருக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார் எனவும் நெகிழ்ந்து பேசினார் ஏஆர் ரகுமான்.

Also Read: எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான 6 பேர்.. நம்பியாரின் இன்னொரு முகம்

Trending News