ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

100 மடங்கு உயர்த்திட்டு வசூல் அதிகம்னா நியாயமா?. அப்படி பார்த்தா படையப்பா வசூல் 3000 கோடி தான்

Movie Padayappa: தனக்கே உரிய உன்னதமான ஸ்டைலால் ரஜினி நடிப்பில் மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் படையப்பா. உலக அளவில் பட்டைய கிளப்பிய இப்படம் நல்ல வசூலை கண்டது. இந்நிலையில் டிக்கெட் ரேட்டை 100 மடங்கு அதிகப்படுத்தி வசூல் சாதனையை பற்றி பேசி வரும் சம்பவம் குறித்த தகவல்களை இங்கு காண்போம்.

பொழுதுபோக்குக்காகவே பார்க்கப்படும் சினிமாவில், நல்ல கருத்துள்ள படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு உண்டு. அவ்வாறு அன்றைய காலகட்டத்தில் திரையரங்குகளில் மட்டும், படம் பார்க்கும் வசதி கொண்டு இருந்தபோது, ஒரு டிக்கெட்டின் அதிகபட்ச விலையே ரூபாய் 2.90தான்.

Also Read: மறுஜென்மம் பெற்ற தனம்.. இறுதி அத்தியாயத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஆனால் இப்பொழுதோ 100 மடங்களுக்கு அதிகமாக டிக்கெட் விலைகளை ஏற்று விட்டார்கள். மேலும் தற்போது ஓ டி டி தளத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது. இத்தகைய விலைவாசியால் சிலர் வீட்டில் இருந்த வாரே ஓ டி டி தளத்தில் படங்களை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலைமையில் இருக்கும் பொழுது இன்றைய காலத்து படங்களை அக்கால படங்களோடு ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளார். அன்றைய காலத்தில் ரூபாய் 2.90 என்பது அதிக தொகை தான். ஆனால் அதையும் பொருள்படுத்தாது படங்களை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

Also Read: நண்பனுக்காக தயாரிப்பாளராகும் நெல்சன்.. எல்லாம் ஜெயிலர் கொடுக்குற தைரியம்

இன்றைய படங்கள் பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு லாபம் ஈட்டுவதை பெரிதாக பேசப்படும் நிலையில் அன்றைய கால கட்டத்தில் உள்ள ரசிகர்கள் இன்றைய விலைவாசியில் படம் பார்த்தால் அதன் மதிப்பு எவ்வளவு மடங்கு உயர்வாக இருக்கும் என்பதையும் எண்ணிப் பாருங்கள் எனவும் கூறினார்.

அப்படிப் பார்த்தால் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படம் பார்க்க வந்த ஆடியன்ஸை கொண்டு இன்றைய டிக்கெட் ரேட்டில் ஒப்பிட்டு பார்த்தால் சுமார் 3000 கோடி வசூலை பெற்றிருக்கும். ஆகையால் பல மடங்கு டிக்கெட் விலையை உயர்த்திவிட்டு அன்னைக்கு வசூல் ஆன படங்களை விட இன்னைக்கு எங்க பட வசூல் தான் அதிகம் என சொல்வதில் நியாயம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Also Read: மாமன்னன் கதையை கவுண்டமணி 2 நிமிஷ காமெடியிலேயே சொல்லிட்டாரு.. அப்போவே டஃ ப் கொடுத்த நக்கல் மன்னன்

Trending News