தெலுங்கு சினிமாவின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மொழி படங்களிலும் தற்போது முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழில் இவர் வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்து முடித்துள்ளார். கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து தளபதி விஜயின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா அவருடன் வாரிசு படத்தில் நடிப்பதால் ஆரம்பத்தில் இருந்தே இப்போது வரை மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். இந்நிலையில் சில காலமாக சமூக வலைத்தளங்களில் ராஷ்மிகாவை பற்றி சர்ச்சை கருத்துக்களாக தொடர்ந்து வருகிறது.
Also Read: விஜய் ஓட சேர்ந்த நேரம் 2 சிக்கலில் மாட்டிய ராஸ்மிகா.. கிரஷ் நடிகைக்கு இப்படி ஒரு அவப்பெயரா?
அதாவது கன்னட மொழி படங்களில் தற்போது ராஷ்மிகா நடிப்பதில்லை என்றும் ரொம்ப தலைக்கனம் பிடித்து ஆடுகிறார் என்று கூறுகின்றனர். மேலும் இயக்குனர்களையும் மதிப்பதில்லை என அவர் மீது அவதூறு கருத்துக்கள் வருகிறது. அதன் பின் இப்போது கன்னட படங்களில் ராஷ்மிகா நடிக்க கூடாது என தடை விதிக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சைகளும் கிளம்பியது. இதற்கு ராஷ்மிகாவே இப்போது விளக்கம் அளித்திருக்கிறார்.
சமீபத்தில் கன்னட மொழியில் வெளியான ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம் சக்க போடு போட்டது. அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது ராஷ்மிகாவிடம் காந்தாரா படம் எப்படி இருந்தது என்று கேட்டதற்கு படத்தை பார்க்கவில்லை என்று கூறியது மிகவும் சர்ச்சையாக வெடித்தது.
Also Read: அவங்க ஒன்னும் கடவுள் இல்ல.. கேமராவை வச்சு பார்த்தார்களா, மீண்டும் எதிர்ப்பை சம்பாதித்த ராஷ்மிகா
இப்போது இது குறித்து ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார். ‘காந்தாரா படம் வெளியான இரண்டே நாட்களில் அந்த படத்தை பார்த்து விட்டீர்களா? தன்னிடம் கேட்டார்கள், ‘இன்னும் இல்லை’ என்றேன். அதன் பின் படத்தை பார்த்த பிறகு படக்குழுவினருக்கு வாழ்த்து சொன்னேன்.
மேலும் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுபவர்களை சுத்தமாகவே கண்டு கொள்ள மாட்டேன். வேண்டுமானால் தொழில் வாழ்க்கை பற்றி கேட்டால் பதில் சொல்வேன். அதுமட்டுமின்றி கன்னட திரை உலகில் எனக்கு என்ன தடையும் விதிக்கவில்லை’ என இவ்வளவு நாள் வதந்திகளாக பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.