Health: இன்றைய காலத்தில் உள்ள உணவுப் பழக்கம், உணவு கலாச்சாரம், தொழில்முறை, உறக்கம் இதெல்லாம் இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன் ஆகியவற்றை தொற்றாத நோய்க்களுக்கு அப்பாற்பட்ட முக்கிய காரணிகள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. அதன்படி, நாம் நலமுடன் வாழ, நல்ல உணவுகளை சுகாதாரமான முறையில் உட்கொள்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல் அந்த உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்கிறோமா என்பதும் முக்கியம்.
‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்று பேராசான் வள்ளுவர் கூறியுள்ளார். உணவு சாப்பிட்ட பின் அது முழு செறிமானம் ஆனபின் அடுத்த வேளை உணவு உட்கொண்டால் யாக்கையாகிய உடலுக்கு எந்தக் கெடுதலும் நேராது. இன்று அப்படிப்பட்ட சூழலிலா இருக்கிறோம்? அதனால்தான் அன்றே ‘உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே’ என்று திருமூலர் பாடிவைத்தார்.
‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ அதேபோல் உடல் இருந்தால் தான் ஓடி உழைத்து சம்பாதித்து குடும்பத்தைப் பார்க்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அதைக் தக்க முறையில் பேணிப்பாதுகாப்பவர்களுக்கு எத்துன்பமும் இல்லை. இந்த உடலைப் பாதுகாக்க, குறித்த நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதன்படி இரவில் நேரம் கழித்து சாப்பிட்டால் லிவர் பாதிப்பு வரும் என்று மருத்துவர் அச்சுறுத்துகிறார்.
இதுகுறித்து மருத்துவர் கூறியுள்ளதாவது: ‘லேட் நைட்டில் அதாவது இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுகின்ற எந்த உணவுப் பொருளும் உடலில் உள்ள பித்தப் பையில் கொழுப்பாகத்தான் மாறும். இந்த பித்தப் பை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் 120 வருடங்கள் செறிமானத்திற்காகவே படைக்கப்பட்டுள்ள ஒரு உறுப்பு. ஆனால் இன்றைக்கு 12 வயது, 20 வயது. 25 வயதிலேயே பித்தப்பையை எடுத்துவிடுகிறார்கள்.
அப்புறம் எப்படி செறிமானம் நடக்கும்? யார் கழிவறைக்குச் செல்வார்கள்? கழிவறைக்குச் சென்றாலும் ப்ரீ மோசன் போகாது. யாருக்கெல்லாம் ப்ரீ மோசன் போவில்லையோ அவர்கள் பரிசோதனை செய்து பார்த்தால், பித்தப்பை உட்புறச் சுவர் பலவீனமாக இருக்கும். அது இருந்தால் பித்தப்பை சுறுங்கிவிடும். இதனால் அஜீரண கோளாறும், நெஞ்செரிச்சல், கை தூக்க முடியாது, முதுகு வலி, செறிமானப் பிரச்சனை இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
இதற்கு ஆலோசனையாக மருத்துவர் முடிந்தவரை வீட்டிலேயே மசாலா பொருட்களைச் சமையுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், ‘முன்பெல்லாம் 6 ஆண்டுகளுக்கு ஒரு கேன்சர் நோயாளிகளைப் பார்ப்பேன். இன்றைக்கு ஒரு நாளைக்கு 10 கேன்சர் நோயாளிகளைப் பார்க்கிறேன்.
அதில், பித்தப்பை கேன்சர், மலக்குடல் கேன்சர், லிவர் கேன்சர். இதில் பெண்களும் உள்ளனர், ஆண்களும் உள்ளனர். 55 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பித்தப்பை கேன்சரால் வருகின்றனர். அவர்கள் வெளியில் மசாலா பொருட்கள் சாப்பிட்டு வருவதால்தான்’ என்று அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்துள்ளார்.