வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பழைய வசூல் ரெக்கார்டை உடைக்க வாரிசு செய்யும் சித்து வேலை.. தளபதி உங்களுக்கே ஓவரா இல்லையா!

நடிகர் விஜய்யின் நடிப்பில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்துடன் நடிகர் அஜித்தின் துணிவு படமும் ஒன்றாக ரிலீசாக உள்ளதால் படத்தின் வசூல் வேட்டையை எப்படி கையாளலாம் என்ற கண்ணோட்டத்தில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

இந்த வருடத்தில் அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் படங்கள் வெற்றிப் பெறாத நிலையிலும் வசூலை 100 கோடிக்கு மேல் வாரிக்கொடுத்தது. இந்நிலையில் பொங்கலன்று ரிலீசாக உள்ள துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்தை காட்டிலும் அதிகமாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் திரையரங்கிற்கு விநியோகம் செய்ததே.

Also Read: உதயநிதியை போல் உருவாகும் அடுத்த வாரிசு.. சம்பளம் கூட கொடுக்காமல் இழுத்தடிக்கும் பரிதாபம்

தமிழகத்தில் மட்டும் 70 சதவிகிதம் திரையரங்குகளில் துணிவு படம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாரிசு திரைப்படத்திற்கு திரையரங்கு கிடைப்பதில் சற்று பிரச்சனை ஏற்பட்டது. தற்போது வாரிசு படத்தின் வசூலை அதிகரிப்பதற்காக நடிகர் விஜய் ஒரு புதுவிதமான ஆலோசனையை படக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் வசூல் 120 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்த நிலையில் வாரிசு படத்தின் வசூலை அதிகரிக்க டிக்கெட் விலையை 500 ருபாய் நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே டிக்கெட் விலை 120 முதல் 250 ரூபாய் வரை திரையரங்கில் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 500 ரூபாய் என்றால் கட்டாயம் இதன் காரணமாக ரசிகர்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

Also Read: வாரிசு படத்தை போல் துணிவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் உச்சகட்ட டென்ஷனில் அஜித்

காலை ஒரு மணி, 4 மணி என இரண்டு காட்சிகள் வாரிசு திரைப்படத்தில் ஒளிபரப்பு உள்ள நிலையில் டிக்கெட் விலையை 500 ரூபாய்க்கு ஏற்றி விலையை நிர்ணயம் செய்துள்ளனர். மேலும் விஜய்யின் திரைப்படத்தின் வசூலை காட்டிலும் வாரிசு திரைப்படத்தின் வசூல் சற்று அதிகரிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக பார்க்கப்படுகிறது.

படத்தை 500 ருபாய் கொடுத்து பார்க்கும்போது படம் ஹிட்டானால் சரி இதுவே தோல்வியடைந்தால் அவ்வளவு தான். இருந்தாலும் படத்தின் வசூலை அதிகரிக்க ரசிகர்களிடம் டிக்கெட் விலையை ஏற்றி தலையில் காட்டுவது சற்றுக்கூட சரியானது அல்ல என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: தீ தளபதி, பேர கேட்டா விசிலடி.. அனல் பறக்க வெளியான வாரிசு செகண்ட் சிங்கிள்

Trending News