திமுகவை எதிர்க்கும் விஜய்.. ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை கலாநிதி பெறுகிறாரா?

Vijay : விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு மார்க்கெட் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் ப்ரைம் பிரைம் நிறுவனம் கைப்பற்றியது.

கிட்டத்தட்ட 121 கோடி கொடுத்து அமேசான் வாங்கி இருந்தது. இதை அடுத்து சாட்டிலைட் உரிமையை எந்த தொலைக்காட்சி பெரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது சன் டிவியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுவும் 51 கோடிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேரடியாகவே திமுகவையும் ஸ்டாலினையும் எதிர்த்து விஜய் பேசி இருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஜனநாயகம் சாட்டிலைட் உரிமையை கலாநிதி பெறுகிறாரா?

அதோடு மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழக கட்சி தான் நேரடியாக திமுகவுக்கு போட்டியாக இருப்பதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஜனநாயகன் படமும் அரசியல் சம்பந்தமான படம் தான்.

இதில் வாக்கின் முக்கியத்துவம் மற்றும் அரசியல் ஆகியவற்றை பற்றி விஜய் பேசியிருக்கிறாராம். அதோடு மட்டுமல்லாமல் திமுகவை எதிர்த்து கூட சில காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படி இருக்கும் சூழலில் கலாநிதி மாறன் எப்படி ஜனநாயகன் படத்தை கைப்பற்றுவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால் சன் டிவி ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமைமை வாங்குவதற்கான சாத்திய கூறுகள் குறைவுதான்.

Leave a Comment