Kavin Star: நல்ல கதையாக இருந்தால் எந்த நடிகரையும் தூக்கிக் கொண்டாட தயங்க மாட்டோம் என்பதற்கு ஏற்ப கவினின் புராணம் திரும்புகிற இடமெல்லாம் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படம் அனைத்து திரையரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது.
இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்றால் லால் மற்றும் கவின் நடிப்பு என்றே சொல்லலாம். அத்துடன் யுவனின் மியூசிக் பட்டைய கிளப்பி விட்டது. அதாவது ஆசை மட்டுமே இருந்தால் வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு போகாது. அதற்கான முயற்சியை தொடர்ந்து எடுத்துக் கொண்டே வரணும்.
அதற்கு முக்கியமாக டெடிகேஷன் மற்றும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தான் கவினின் ஸ்டார் படம் இருக்கிறது. அதாவது தன்னால் முடியாததை தன் மகன் செய்து காட்ட வேண்டும் என்று சொல்வதற்கு ஏற்ப லால் ஆசை நிராசையாக போனதால் தன்னுடைய மகனை வைத்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று தந்தையின் போராட்டத்தை துல்லியமாக காட்டப்பட்டிருக்கிறது.
உணர்வுபூர்வமாக பேசிய நடிகர்
அந்த வகையில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கவின் எடுக்கும் முயற்சியில் தோல்விகளையும் துன்பங்களையும் சந்தித்து கனவை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் கதையாக இருக்கிறது. இந்த கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் நடித்திருக்கிறார்.
இவருடைய கதாபாத்திரம் சினிமாவில் சின்ன கேரக்டரில் நடிக்கும் ஒரு காமெடி கதாபாத்திரம். இவர் மூலமாக கவினுக்கு ஒரு வாய்ப்பு வருவதாக இருந்தது. ஆனால் அது ஏமாற்றமாக முடிந்து விட்டது. பின்பு கிளைமாக்ஸ் காட்சியில் கவின் துவண்டு போய் இருக்கும் நேரத்தில் காதல் சுகுமாரை கவின் எதிர்ச்சியாக சந்திக்கிறார்.
ஆனால் அப்பொழுது அவர் சினிமாவை விட்டு வயிற்று பொழப்புக்காக குல்பி ஐஸ் வைக்கும் ஒரு நபராக காட்டப்படுகிறது. பிறகு இவர்களிடையே நடக்கும் சந்திப்பில் சினிமாவில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை பற்றி பேசி அதன் மூலம் ஏற்படும் லாப நஷ்டங்களை சொல்லும் விதமாக அமைந்திருக்கும்.
இதைப்பற்றி சமீபத்தில் காதல் சுமார் அளித்த பேட்டியில் இயக்குனர் என்னிடம் எனக்கான கதாபாத்திரம் சொல்லும் பொழுது சினிமா திறமை இல்லாதவனை கோபுரத்தில் ஏற்றி விடும். அதேபோல திறமையோடு காத்திருப்பவர்களை காலில் போட்டு மிதிக்கும். ஆனால் கடைசிவரை அவன் போராடி லட்சியத்தில் எப்படி சாதிக்கிறான் என்பது தான் ஒரு கதையாக எடுக்கிறேன்.
இதில் உங்களுடைய பங்களிப்பு மிக முக்கியமாக இருக்கும் என்று கூறினார். அதன்படி இந்த படத்தின் கதையை பார்க்கும் பொழுது என்னுடைய பயோபிக் கதையை அப்படியே எடுத்தது போல் எனக்கு ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கண்ணீருடன் ஆதங்கத்தில் பேட்டி அளித்திருக்கிறார். இது இவருக்கு மட்டுமில்லாமல் சினிமாவில் இருக்கும் எத்தனையோ ஆர்டிஸ்ட்களுக்கும் பொருந்தும்.