திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

குடும்ப நண்பருடன் கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா.? சர்ச்சையை கிளப்பிய அப்பாவின் பதில்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் கீர்த்தி சுரேஷ். அதன்பின் படிப்படியாக ஹீரோயினாக தன்னை புதுப்பித்துக் கொண்டவர். அவ்வாறு இருக்க தற்போது இவர் திருமணம் குறித்து தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக தமிழில் நடித்துள்ளார். அதன் பின் ரஜினி முருகன், ரெமோ, பைரவா ஆகிய படங்களில் டாப் ஹீரோக்களுடன் கதாநாயகியாக இடம்பெற்றுள்ளார். மேலும் வாரிசு பட வெளியீட்டின் போது இவரை விஜய்யுடன் ஒப்பிட்டு சர்ச்சை ஏற்பட்டது.

Also Read: உண்மை கதைக்காக வெற்றிகண்ட 5 படங்கள்.. சூர்யாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த படம்

மேலும் அவை வதந்தி என்ற நிலையில், நடிப்பில் ஆர்வம் காட்டிய கீர்த்தி சுரேஷ் பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். 2022ல் வெளிவந்த சாணிக்காயிதம் என்னும் படத்தில் செல்வராகவனுடன் பழிவாங்கும் படலத்தில் இவர் நடித்திருப்பார். இப்படம் அவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

அதைத் தொடர்ந்து தெலுங்கு படமான தசராவில் இவரது நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் பிசியாக இருந்து வரும் நிலையில் இவர் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக வெளிவந்த ஒரு செய்தி பரபரப்பை உண்டுபடுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து அவரின் அப்பா திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் விளக்கம் அளித்து வருகிறார்.

Also Read: காதல் கணவரால் அந்தரங்க தொழிலுக்கு சென்ற நடிகை.. முன்னணி நடிகையாக இருந்து சீரழிந்த கொடுமை.!

சுரேஷ் பர்ஹான் என்பவர் தன் குடும்ப நண்பர் எனவும், இவரை கீர்த்தி காதலிக்கவில்லை இது ஒரு வதந்தி எனவும் தன் விளக்கத்தை வெளிக்காட்டி வருகிறார் கீர்த்தியின் தந்தை சுரேஷ் குமார். மேலும் இருவரும் காதலிப்பதாக கூறுவது உண்மை இல்லை. இது போன்ற வதந்தி, குடும்பங்களை குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் தன் வேதனையை வெளிக்காட்டி வருகிறார்.

தன் மகளைக் குறித்த இதுபோன்ற வதந்திகளை பெரிதாக நம்புவதில்லை எனவும். தன் நண்பர் கேட்டுக் கொண்டதன் விளைவாக இத்தகைய விளக்கத்தை நான் கொடுக்கிறேன் என்று மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார் . ஆனால் இது போன்ற வதந்திகளை சற்றும் பொருட்படுத்தாத கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் திருமணத்திற்கு தற்பொழுது முட்டுக்கட்டை போட்டு உள்ளதாக சினிமா வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.

Also Read: வில்லனுடன் ரகசியமாக வாழும் நடிகை.. கல்யாணம் செய்யச் சொல்லி அடம் பிடித்ததால் நேர்ந்த விபரீதம்

- Advertisement -

Trending News