திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினிக்கு போட்டியாக வரும் மோட்டார் மோகனின் படம்.. மீடியா முன் மணிகண்டன் கூறிய பதில்

Is Lal Salaam competing with small budget films: 73 வயதிலும் செம எனர்ஜிடிக்காக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய டார்கெட் செய்தனர். ஆனால் ஒரு சில காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இப்போது பிப்ரவரி 9ம் தேதி வெளியாகிறது.

ஆனால் இந்த மாதத்தில் நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகிறது. இந்த படங்களுக்கு எல்லாம் போட்டியாக லால் சலாம் இருக்குமா என்பதுதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிலும் நல்ல தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் லவ்வர் திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் வெளியாகும் அதே தினத்தில் தான் வெளியாகிறது.

தற்போது லவ்வர் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்கிறது. பிப்ரவரி மாதம் முழுவதுமே காதலர்களால் கொண்டாடப்படக்கூடிய மாதம் என்பதால் லவ்வர் படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் முன்பே முடிவெடுத்துவிட்டனர். ஆனால் இப்போது எதிர்பாராத விதமாக லால் சலாமுக்கு போட்டியாக மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது.

Also Read: இந்த வாரம் தியேட்டர், ஓடிடியை குறி வைக்கும் படங்கள்.. மொய்தீன் பாயோடு போட்டி போடும் கேப்டன் மில்லர்

லால் சலாம் படத்துடன் நேருக்கு நேர் மோதும் மணிகண்டன்

லவ்வர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர், ‘ரஜினியுடன் போட்டி போடுகிறீர்களா?’ என்று மணிகண்டனிடம் கேட்டதற்கு, ‘என்னுடைய படம் ரொம்பவே சின்ன பட்ஜெட் படம். ரஜினியோட ஸ்கேலே வேற. அவருடைய படத்தை பெரிய பெரிய நிறுவனங்கள் டிஸ்ட்ரிபியூஷன் செய்யும். இருந்தாலும் பெரிய பட்ஜெட் படங்கள் எங்களைப் போன்ற சிறிய பட்ஜெட் படங்களை பாதிக்காது என்று நம்புகிறோம்’.

மேலும் லால் சலாம் படம் கிரிக்கெட்டை மையமாகவும், இந்து- முஸ்லிம் மதவெறிக்கு எதிரான படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் லவ்வர் படம் அப்படியே டோட்டலாக வேற ஜானரில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இளைஞர்கள் 25 வயதைக் கடந்த பிறகு, அவர்களுக்கு காதல், கேரியர், ஐடென்டிட்டி என்ற மூன்று விஷயங்கள் தான் பிரச்சனையாக அமையும்.

இவை மூன்றும் எப்படி ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது, ஒன்று பாதித்தால் இன்னொன்று தானாகவே பாதிக்கப்படும் என்ற விஷயங்களை எல்லாம் இந்த படத்தில் ரொம்பவே ரியாலிட்டியாக காட்ட முயற்சித்திருக்கின்றனர். இந்த படம் மணிகண்டனுக்கு குட் நைட் படத்தை போல் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லால் சலாம் படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ரஜினியின் படமாகவே பார்ப்பதால், அதனுடன் லவ்வர் போட்டி போட்டு ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: பணத்துக்கு ஆசைப்படாத செந்தில்.. சூப்பர் ஸ்டார் கூப்பிட்டும் மறுத்த சம்பவம்

Trending News